வெல்கம் மோடி! அசிங்கப்பட்ட பிரபல நடிகை!

 

வெல்கம் மோடி! அசிங்கப்பட்ட பிரபல நடிகை!

பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம், நடிகை கஸ்தூரியைப் போலவே ட்விட்டரில் அடிக்கடி பரபரப்பான விஷயங்களைப் பற்றி கருத்து சொல்லி கவனம் ஈர்த்து வருபவர். இந்நிலையில், பிரதமர் இன்று தமிழகம் வந்திருக்கும் நிலையில், வழக்கம் போல் சமூக வலைத்தளங்களில்

பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம், நடிகை கஸ்தூரியைப் போலவே ட்விட்டரில் அடிக்கடி பரபரப்பான விஷயங்களைப் பற்றி கருத்து சொல்லி கவனம் ஈர்த்து வருபவர். இந்நிலையில், பிரதமர் இன்று தமிழகம் வந்திருக்கும் நிலையில், வழக்கம் போல் சமூக வலைத்தளங்களில், ‘கோ பேக் மோடி’ என்ற வாசகத்தை அதன் பயனாளர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

gayathri

பாஜக உறுப்பினராக இருந்து வரும் நடிகை காயத்ரி ரகுராம், அவரது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாடு மோடியை வரவேற்கிறது. பணம் வாங்கிக் கொண்டு ட்விட்டரில் எதிர்கருத்து கூறும் ட்விட்டர் பாய்ஸை கண்டுக் கொள்ளாதீர்கள். அவர்கள் அனைவரும் பாகிஸ்தானை ஆதரிப்பவர்கள்’ என்று பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவிற்கும், ட்விட்டர் பயணாளர்கள் எதிர்கருத்து கூறி, ‘பணம் வாங்கிக் கொண்டு கூவும் ட்விட்டர் பெண்ணே’ என்றும், ‘நீ சொல்றதைச் சொல்லு… அப்பவாவது உனக்கு கவர்னர் ஆகுற அதிர்ஷ்டம் இருக்கான்னு பார்க்கலாம்’ என்றும் நடிகை காயத்ரி ரகுராமை தொடர்ந்து வறுத்தெடுத்து வருகிறார்கள்.