வெற்றி பெற்றும் தலைவர் பதவி கிடைக்காமல் திமுக திணறல் ! கொடியை நாட்டிய அதிமுக !

 

வெற்றி பெற்றும் தலைவர் பதவி கிடைக்காமல் திமுக திணறல் ! கொடியை நாட்டிய அதிமுக !

தேனி மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 3 ஒன்றியங்களில் ஒன்றிய தலைவர் பதவிகள் அதிமுகவினரிடம் செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தேனியில் அதிக இடங்களை திமுக பெற்றிருந்தாலும், 3 ஒன்றியங்களில் உள்ள தலைவர் பதவி தங்களுக்கே கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் குறைந்த இடங்களை பிடித்தாலும் தலைவர் பதவிகளை பிடிக்கும் அதிமுக ! திமுக கவுன்சிலர்களும் அதிமுகவுக்கு ஆதரவு !தேனி மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 3 ஒன்றியங்களில் ஒன்றிய தலைவர் பதவிகள் அதிமுகவினரிடம் செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தேனியில் அதிக இடங்களை திமுக பெற்றிருந்தாலும், 3 ஒன்றியங்களில் உள்ள தலைவர் பதவி தங்களுக்கே கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றுள்ளது. இப்பொழுது,  மாவட்டத் தலைவர், ஒன்றியத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் நாளை நடைபெறுகிறது.

election

தேனி மாவட்டத்தில் 8 மாவட்ட கவுன்சிலர் இடங்களை கைப்பற்றிய அ.தி.மு.க, மாவட்டத் தலைவர் பதவியைப் பெறப் போகிறது என்பதில் சந்தேகம் இல்லை. கம்பம், போடி, ஆண்டிபட்டி, உத்தமபாளையம் ஒன்றியங்களில் அ.தி.மு.க, அதிக ஒன்றியக் கவுன்சிலர்களை வென்றுள்ளது. எனவே 4 ஒன்றியங்களின் தலைவர் பதவியும், அ.தி.முகவுக்கே கிடைக்கும் என்பது உறுதியாகிவிட்டது.  

dmk

அதே சமயத்தில் தேனி, சின்னமனூர், பெரியகுளம் ஒன்றியங்களில் தி.மு.க அதிக இடங்களைப் பெற்றிருப்பதால் ஒன்றியத் தலைவர் பதவிகள் திமுக வசம் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுகவினர் அராஜகம் செய்ததால் அந்த பதவிகளும் அதிமுகவுக்கே கிடைக்கும் என அதிமுகவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். சின்னமனூர் ஒன்றியம் பொட்டிபுரம் முதல் வார்டில் வெற்றி பெற்ற திமுக வெட்பாளர் ஜெயந்தியை வீட்டில் அடைத்து வைக்க திமுகவினரே முயற்சித்ததாவும், அது எடுபடாமல் போகவே அவரை வீடு புகுந்து தாக்கியதாகவும் அதிமுகவினர் குற்றம்சாட்டினர். 

ops

தற்போது ஜெயந்தி ஓ.பி.எஸ்.சை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளதால் சின்னமனூர் ஒன்றியத்தில், திமுக பலம் 5 ஆக குறைந்துவிட்டது. திமுக-வினரின் அராஜ செயல்களால் சில தி.மு.க கவுன்சிலர்களும் அதிமுக ஆதரவு தெரிவிக்க உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனது. 

dmk

இதேபோல் பெரியகுளம் ஒன்றியம், ஜெயமங்கலம் 8-வது வார்டில் வெற்றி பெற்ற திமுகவை சேர்ந்த ஒன்றியக் கவுன்சிலர் செல்வம், துணைமுதல்வரை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். அதனால்,  பெரியகுளம் ஒன்றியத்திலும் தி.மு.க-வின் பலம் 7 ஆக குறைந்துவிட்டதாக அதிமுகவினர் தெரிவிக்கின்றனர். 

தேனி ஒன்றியத்தை பொறுத்தவரை 7 இடங்களில் திமுக, 4 இடங்களில் அ.தி.மு.க, 1 இடத்தில் சுயேட்சை வெற்றி பெற்றுள்ளது. இதற்கிடையே சுயேட்சை வேட்பாளர் தனது ஆதரவை அ.தி.மு.க-வுக்கு தெரிவித்து விட்டதால், மேலும் சில தி.மு.க கவுன்சிலர்கள் அதிமுக ஆதரவு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.