“வெற்றிவேல் யாத்திரை நாளை திட்டமிட்டபடி நடைபெறும்” எல் முருகன்

 

“வெற்றிவேல் யாத்திரை நாளை திட்டமிட்டபடி நடைபெறும்” எல் முருகன்

இந்துக்களுக்கு எதிரான சக்திகளை அடையாளம் காட்டவும், மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லவும் திருத்தணியிலிருந்து வேல் யாத்திரை தொடங்கப்போவதாக தமிழக பாஜக தலைவர் முருகன் அறிவித்திருந்தார். இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என பல கட்சிகளும் வலியுறுத்தின.

“வெற்றிவேல் யாத்திரை நாளை திட்டமிட்டபடி நடைபெறும்” எல் முருகன்

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘ இந்த பிரச்சனையில் தமிழக அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம்’ என்று தீர்ப்பளித்தது. இதனையடுத்து மத்தியில் ஆளும் கட்சி என்பதால் பாஜக யாத்திரைக்கு எடப்பாடி அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கி எதிராக தமிழக அரசு, பாஜகவினரின் யாத்திரைக்கு தடை விதித்தது. ஆனால் அதனையும் மீறி பாஜக தலைவர் முருகன் தலைமையிலான பாஜகவினர் ஏராளமானோர் வேல் யாத்திரையில் ஈடுபட்டனர். அதன்பின் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எல். முருகன், “வேல் யாத்திரை தொடர்பாக நீதிமன்ற விசாரணை நடைபெறுகிறது. அதில் அவர்கள் வழங்கும் விதிமுறைகளை பின்பற்றி வேல் யாத்திரை நடத்துவதில் தங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. முகக்கவசம் உள்ளிட்ட அரசின் வழிமுறைகளை பின்பற்றியே பாஜகவினர் வேல் யாத்திரை நடத்தினோம் எனவும் இனியும் அதை பின்பற்றியே வேல் யாத்திரையை நடத்துவோம். நாளை வெற்றிவேல் யாத்திரை திட்டமிட்ட படி நடைபெறும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் இருந்து வேல் யாத்திரை தொடங்கும்” என தெரிவித்தார்.