வெற்றிலையில் இருக்கும் மருத்துவ குணங்கள்!

 

வெற்றிலையில் இருக்கும் மருத்துவ குணங்கள்!

வெற்று இலை தானே என்று இனி வெற்றிலையை ஒதுக்கி தள்ளிவிடாதீர்கள். வெற்றிலையில் அத்தனை மருத்துவ குணங்களும், ஆன்மிக சிறப்புகளும் இருக்கிறது. அதனால் தான் அதை வெற்றி இலை என்கிறோம்

வெற்று இலை தானே என்று இனி வெற்றிலையை ஒதுக்கி தள்ளிவிடாதீர்கள். வெற்றிலையில் அத்தனை மருத்துவ குணங்களும், ஆன்மிக சிறப்புகளும் இருக்கிறது. அதனால் தான் அதை வெற்றி இலை என்கிறோம். 

betel leaf

ஆன்மிக ரீதியாக, வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் மூதேவியும் வசிக்கின்றனர் என்பது ஐதீகம். அதனால் தான் வெற்றிலையைப் போடும் போது காம்பைக் கிள்ளிவிட்டு போடுகிறோம். மகாவிஷ்ணுவும், பிரம்மாவும், சிவனும், சுக்ரனும் கூட வெற்றிலையில் வாசம் செய்கின்றனர். எனவேதான் பூஜை மற்றும் திருமணம் சுபமாக நடக்க வேண்டும் என்பதற்காகவே வெற்றிலை பாக்கு வைக்கிறோம். இறைவனுக்கும் நிவேதனம் செய்யும் போது வெற்றிலை பாக்கு வைக்கிறோம். 

வெற்றிலையில் மூன்று ரகங்கள் உண்டு. தளிர் நிறம் உள்ள வெற்றிலைக்கு வெள்ளை வெற்றிலை என்று பெயர். இது மணமாக இருக்கும். கருப்பு நிறத்தில் உள்ள வெற்றிலைக்கு கருப்பு வெற்றிலை அல்லது கம்மாறு வெற்றிலை என்று பெயர். கற்பூர மணம் உள்ள வெற்றிலை தாமரை இலை போன்று பெரியதாகவும் நல்ல நிறத்தோடும் இருக்கும். இதற்கு கற்பூர வெற்றிலை என்று பெயர். 

betel leaf

கம்மாறு வெற்றிலைச் சாறை தினமும் காலை உணவிற்கு பிறகு அரை ‘அவுன்ஸ்’ வீதம் மூன்று நாள் குடித்து வந்தால் வாத, பித்த கபத்தால் ஏற்படும் ஏற்றத்தாழ்வை குறைத்து சீராக்கும். உடலில் நீர் ஏற்றம், தலையில் நீர் ஏற்றம், தலை பாரம் உணவு செரியாமை,மந்தம், குரல் கம்மல் வயிற்றுவலி, வயிற்று உப்புசம் ஆகியவை நீங்கும். வெற்றிலையை இளம் சூட்டில் வதக்கி சாறு எடுத்து அச்சாற்றை மூக்கில் இரண்டு துளி விட தலை நோய், தலைபாரம், தலையில் நீர்தேக்கம் ஆகியவை நீங்கும். இரண்டு வெற்றிலையுடன் 50 கிராம் ஊற வைத்த சிவப்பு அரிசியை சேர்த்து உண்டால் கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். 

வெற்றிலையை சூடுபடுத்தி நெற்றியில் வைத்திருக்க ஈரத்தால் வரும் தலைவலி நீங்கும். கடுமையான வயிற்றுவலிக்கு ஒரு வெற்றிலையில் ஐந்து மிளகு வைத்து மென்றுச் சாப்பிட உடனடியாக வலி நீங்கும். வெற்றிலைச் சாருடன் அரிசி திப்பிலி சேர்த்து அரைத்து வடிகட்டி சம அளவு தேன் கலந்து கொள்ளவும்  காலை  மாலை சாப்பிட மூளை  இதய சம்பந்தமான நோய் தீரும். 

betel leaf

துளசி, வெற்றிலை, இஞ்சி, மிளகு இவற்றை சம அளவு எடுத்து அரைத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி காலை மாலை இரு வேளை சாப்பிட்டு வர வயிற்றுக் கோளாறுகள் மற்றும் சளித்தொல்லை நீங்கும்.  சித்த மருத்துவத்தின்படி வெற்றிலை 17 விதமான மருத்துவ குணங்களைக் கொண்டது. வெற்றிலையில் புரதச் சத்துடன்  இரும்பு சத்து  கால்ஷியம் சத்து மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியைத்  தரும் வேதிப் பொருளும் இருப்பதாக ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.