வெற்றியில் குழப்பம்: மீண்டும் எண்ணப்படும் ஓட்டுகள்! 

 

வெற்றியில் குழப்பம்: மீண்டும் எண்ணப்படும் ஓட்டுகள்! 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் மாவட்ட குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான  91,975 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் மாவட்ட குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான  91,975 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில்  76.19 %  வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73% வாக்குகளும் பதிவாகியது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. ஒரு சில இடங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகின. ஆனால், பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 

LocalBodyElectionResult

இந்நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தாசலம் 1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான ஓட்டு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் அர்ச்சுணனை விட, சுயேட்சை வேட்பாளர் ஆனந்தகண்ணன், 120 ஓட்டுகள் கூடுதலாக பெற்ற நிலையில், அர்ச்சுணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தகண்ணன், அவரின் ஆதரவாளர்கள் மற்றும் திமுக.,வினர், தேர்தல் அதிகாரியை முற்றுகையிட்டு கூச்சலிட்டனர். இதனால், 1வது வார்டுக்கு உட்பட்ட ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பதிவான ஓட்டுகள் மீண்டும் எண்ணப்படுகிறது.