‘வெற்றியில் அடக்கமும்; தோல்வியில் எழுச்சியும் தேவை’ – பாஜக படுதோல்வி குறித்து ஹெச்.ராஜா

 

‘வெற்றியில் அடக்கமும்; தோல்வியில் எழுச்சியும் தேவை’ – பாஜக படுதோல்வி குறித்து ஹெச்.ராஜா

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்திருக்கும் நிலையில், அதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஹெச்.ராஜா பதிவு செய்துள்ளார்.

சென்னை: நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்திருக்கும் நிலையில், அதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஹெச்.ராஜா பதிவு செய்துள்ளார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் காவி கொடி பறக்கும் என்றும், வரும் காலங்களில் அகண்ட பாரதம் அமைப்போம் என்றும் மார்தட்டி வந்தவர்களுக்கு இந்த தேர்தல் முடுவுகள் பெரும் இடியாய் வந்து சேர்ந்திருக்கிறது.

குறிப்பாக, ஆட்சி செய்து வந்த மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மண்ணைக் கவ்வியது தான் பாஜக தொண்டர்களுக்கு பெரும் பயத்தை ஏற்படுத்தியிருக்கும். 

இந்நிலையில், அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தன் ட்விட்டர் பக்கத்தில், “ஜனநாயகத்தில் வெற்றி தோல்விகள் சகஜம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த தேர்தலில் கட்சிக்காக அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் பணியாற்றிய அனைத்து செயல்வீரர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். வெற்றியில் அடக்கமும் தோல்வியில் எழுச்சியும் தேவை.” என பதிவிட்டுள்ளார். 

ஹெச்.ராஜாவின் இந்த பதிவில், தோல்வியின் ஆற்றாமையும், எதிர்காலத்தை நினைத்த அச்சமும் வெளிப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.