வெற்றிப்பெற்றவுடன் டகால்டி காட்டும் முதலமைச்சர் பழனிசாமி!

வெற்றிப்பெற்றவுடன் டகால்டி காட்டும் முதலமைச்சர் பழனிசாமி!

தேர்தல் முடிவு வரும்வரை டிசம்பர் 30 தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்துவந்த முதலமைச்சர் பழனிசாமி உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும் என தற்போது மாற்றிமாற்றி பேசுகிறார். 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, “நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு சரித்திரம் வாய்ந்த வெற்றி கிடைத்துள்ளது. மக்கள் நலதிட்டங்களை அதிமுக தொடர்ந்து செயல்படுத்திவருவதால் மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. குடிமராமத்து போன்ற சிறப்பு வாய்ந்த மக்கள் நல திட்டங்களை அதிமுக தொடர்ந்து செயல்படுத்தி வருவதால் மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. டெங்குவை ஒழிக்க பொதுமக்கள் தாங்களாக முன்வந்து சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசுடன் சேர்ந்து மக்களும் உதவ வேண்டும்.

EPS

காய்ச்சல் ஏற்பட்டால் உடனே அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு சரித்திரம் வாய்ந்த வெற்றி கிடைத்துள்ளது. திமுக அளித்த பொய்யான வாக்குறுதிகள் இந்த தேர்தலில் எடுபடவில்லை. ஆனால் தமிழக அரசோ உண்மையான வாக்குறுதிகளை அளிப்பதுடன், பல விருதுகளையும் வாங்கி குவித்துள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தின் முடிவுகளில் தமிழக அரசு தலையிட முடியாது. எனவே உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க  வேண்டும்” என தெரிவித்துள்ளார்.