‘வெறித்தனம்’: ட்விட்டரில் தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள் 

 

‘வெறித்தனம்’: ட்விட்டரில் தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள் 

அட்லீ- விஜய் காம்போவில் உருவாகிவரும் படம் பிகில். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

அட்லீ- விஜய் காம்போவில் உருவாகிவரும் படம் பிகில். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. தற்போது விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

அதைத்தொடர்ந்து ‘சிங்கப்பெண்ணே’ என்ற சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் வெறித்தனம் பாடலின் புரொமோ வீடியோ படக்குழு நேற்று வெளியிட்டது.
ஏ.ஆர்.ரஹ்மான், விஜய், அட்லி, பாடலாசிரியர் விவேக் ஆகியோர் இந்தப் பாடலின் இசையமைப்பில் ஈடுபட்ட காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

நம்ம நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் நம்ம சனம் வெறித்தனம்

இன்னா இப்ப லோக்கலுன்னா நாம கெத்தா உலாத்தணும்

இன்று வெளியாகவுள்ள இந்த படத்தின் பாடலை முன்னிட்டு ட்விட்டரில் #verithanamday என்ற ஹாஸ் டாக் ட்ரெண்டாகி வருகிறது.