வெய்யில் காலத்தில் காரில் பயணிக்கும் போது இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம் !

 

ஏ.ஸி இல்லாம என்னால ஒரு நிமிஷம் கூட என்னால இருக்க முடியாது என்று சொல்லக்கூடிய ஆளா நீங்கள்.அப்படியானால் இந்த செய்தி உங்களுக்கானதுதான்.
 

ஏ.ஸி இல்லாம என்னால ஒரு நிமிஷம் கூட என்னால இருக்க முடியாது என்று சொல்லக்கூடிய ஆளா நீங்கள்.அப்படியானால் இந்த செய்தி உங்களுக்கானதுதான்.

காரில் ஏறியதும் ஏ.ஸியை ஆன் செய்ய வேண்டாம் 

கோடைகாலத்திற்கு இணையாக இப்போதே வெயில் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. உங்கள் காரை வெயில் படும் படி பார்க் செய்திருக்கிறீர்கள். அந்த நேரத்தில் காரை எடுத்துக்கொண்டு வெளியில் போக வேண்டும். எவ்வளவு அவசரமான வேலையாக கிளம்பினாலும்,காரில் ஏறியதும் முதலில் கார் கண்ணாடிகள் அனைத்தையும் கீழே இறக்கிவிட்டபடி கொஞ்ச தூரம் பயணம் செய்த பிறகு தான்,கார் ஏ.ஸியை ஆன் செய்யவேண்டும்.

travel in summer

 
அதே நிலையில் இன்னும் கொஞ்ச தூரம் போன பிறகு…ஏ.ஸியை ஆன் செய்து ,காரின் வெப்பநிலை மாறிய பிறகு மெதுவாக கார் கண்ணாடியை ஏற்றிவிட்டு தொடர்ந்து பயணம் செய்வதுதான் பாதுகாப்பானது.
 
மாறாக,காரில் ஏறியதும் ஏ.ஸியை ஆன் செய்வது,சொந்த காசில் சூனியம் வைப்பதுக்கு சமம். எப்படின்னு கேக்குறிங்களா! இது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில் பல அதிர்ச்சி உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.

ஆபத்து விளைவிக்கும் பென்சீன் 

பொதுவாகவே அனைத்து கார்களுக்குள்ளும் அமைந்துள்ள DASHBOARD, இருக்கைகள் மற்றும் காருக்குள் உள்ள அனைத்து பிளாஸ்டிக்கினால் ஆன பாகங்களும்  பென்சீன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் நச்சை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை.

travel in summer

 
சாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50 மில்லி கிராம்.வீடுகளில் நிழலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400 முதல் 800 மில்லி கிராம் என்ற அளவில் பென்சீன் இருக்கும். அதே வேளையில் வெயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 4000 மில்லி கிராம் வரையில் இருக்கும். இது மனித உடல் ஏற்றுக்கொள்ளும் அளவை விட 40 மடங்கு அதிகம்.
 
இதன் காரணமாக கேன்சர், லுக்கூமியா, சிறு நீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
கார்களிலுள்ள ஜன்னல்களை சிறிது நேரம் திறந்து வைப்பதனால் அதிகப்படியான பென்சீன் வெளியேறிவிடும்.
 
அப்பறமென்ன,நீங்க பாட்டுக்கு ஜாலியா டிராவல் பண்ணுங்க.

 

இதையும் படிங்க :

கட்சிகள் வெயிலில் பொதுக்கூட்டங்கள் நடத்தக் கூடாது – தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் அனல் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!