வெயிலில் கொரோனா பரவாதா? – வதந்தியும் உண்மையும்!

 

வெயிலில் கொரோனா பரவாதா? – வதந்தியும் உண்மையும்!

கொரோனா வைரஸ் பற்றி பல்வேறு வதந்திகள் சமூக ஊடகங்களில், மக்கள் மத்தியில் பரவிக்கொண்டே இருக்கிறது. அவற்றில் முக்கியமான சில வதந்திகள் பற்றியும் உண்மை என்ன என்றும் காண்போம்.

கொரோனா வைரஸ் பற்றி பல்வேறு வதந்திகள் சமூக ஊடகங்களில், மக்கள் மத்தியில் பரவிக்கொண்டே இருக்கிறது. அவற்றில் முக்கியமான சில வதந்திகள் பற்றியும் உண்மை என்ன என்றும் காண்போம்.
வதந்தி: அதிக வெப்பமான சூழ்நிலையில் கொரோனா வைரஸ் அழிந்துவிடும் பரவாது.
உண்மை: உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை படி இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கொரோனா கோவிட் 19 வைரஸ் எந்த ஒரு தட்பவெப்ப நிலையிலும் வேகமாக பரவும், அது அதிக வெப்பமாக இருந்தாலும் சரி, குளிராக இருந்தாலும் சரி. 

corona virus.jpg1.jpg

வதந்தி: வெந்நீரில் குளித்தால் கொரோனா வைரஸ் அழிந்துவிடும்.
உண்மை: நம்முடைய உடலின் இயல்பு வெப்பநிலை என்பது 36.5 முதல் 37 டிகிரி செல்ஷியஸ் ஆகும். இந்த வெப்பநிலைக்கு ஏற்பத்தான் நாம் வெந்நீரில் குளிக்கிறோம். அதனால் வெந்நீரில் குளிப்பதால் மட்டும் வைரஸ் கிருமியைத் தவிர்த்துவிடலாம் என்று கூற முடியாது. பொது மக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதிகளில் கை வைக்காமல், அவ்வப்போது தரமான கிருமி நாசினி பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்துவதன் மூலம் கொரோனா பாதிப்பிலிருந்து தப்பலாம்.
வதந்தி: உடல் முழுக்க ஆல்கஹால், க்ளோரினை ஸ்பிரே செய்வதன் மூலம் கொரோனா வைரஸை தவிர்க்கலாம்.
உண்மை: நம் உடல் வெளிப்புற வழியாக அது பரவவில்லை… சுவாசம் மூலம் உடலுக்குள் நுழைகிறது. இதனால், உடல் முழுக்க ஆல்கஹால் தெளிப்பதால் எந்த பயனும் இல்லை. மேலும், இது சருமத்தில் வேறுவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். கண், வாயில் பட்டால் பெரிய உடல்நலக் குறைபாட்டையே ஏற்படுத்திவிடும்.

corona virus

வதந்தி: பூண்டு சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவாது!
உண்மை: பூண்டு ஆரோக்கியமான உணவுதான். அதில் பாக்டீரியா கிருமிகளை அழிக்கும் வேதிப் பொருள் உள்ளது. ஆனால் தற்போதைய கொரோனா வைரஸ் கிருமியை அழிக்கும் சக்தி அதற்கு உள்ளது என்பதற்கு எந்த ஒரு ஆய்வு முடிவும் இல்லை.
வதந்தி: கோழிக்கறி, முட்டை சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவும்.

croron

உண்மை: இதுவும் வெறும் வதந்திதான். கோழிக் கறி மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும், கோழி இறைச்சியை நன்கு வேகவைத்து சாப்பிடுவதால் எந்த கிருமித் தொற்றும் ஏற்படாது.