வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

 

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கிவிட்டது. தினமும் வெயில் சுட்டெரிக்கிறது. ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் வெக்கை, அனல் வீட்டுக்குள்ளே அதிகமாகி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரக்கைவிடுத்துள்ளது.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கிவிட்டது. தினமும் வெயில் சுட்டெரிக்கிறது. ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் வெக்கை, அனல் வீட்டுக்குள்ளே அதிகமாகி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொது மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் அது அறிவுறுத்தியுள்ளது.

tamilandu-weather-center.jpg

விருதுநகர், மதுரை, கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களிலும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியிலும் வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியஸ் என்ற நிலையிலேயே பதிவாகும் என்று கூறப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக லேசாக மழை பெய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.