வெப் சீரிஸ் “குயின்”  ஜெயலலிதாவின் கதை இல்லை? இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் விளக்கம்! 

வெப் சீரிஸ் “குயின்”  ஜெயலலிதாவின் கதை இல்லை? இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் விளக்கம்! 

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக்  கொண்டு ஜெயலலிதாவின் பயோபிக்  வெப் சீரிஸாக வெளியாகவுள்ளது. இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனும் , கிடாரி பட இயக்குநர்  பிரசாந்த் முருகேசனும் இயக்கி உள்ளனர்.இந்த வெப் சீரிஸுக்கு குயின் என்று  என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது எம்எக்ஸ் பிளேயரில் ஒளிபரப்பப்படும். இதில் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடித்துள்ளார். அண்மையில் இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெப் சீரிஸ் வரும் 14ஆம் தேதி வெளிவரவிரவுள்ளது. 

queen

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வரும் தலைவி படம் மற்றும் குயின் வெப் சீரீஸை வெளியிடத் தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  குயின் சீரிஸின் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டார். இந்நிலையில் குயின் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமே இல்லை என கெளதம் வாசுதேவ் மேனன் விளக்கம் அளித்துள்ளார். 

gvm

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கெளதம் வாசுதேவ் மேனன், “தி குயின்” என்னும் நாவலை அடிப்படையாக கொண்டு இந்த வெப் சீரிஸ் உருவாக்கப்பட்டது. இதனை எம்எக்ஸ் பிளேயரில் ஒளிபரப்பப்ப உரிமை வாங்கப்பட்டுள்ளது.  நீதானே என் போன் வசந்தத்தின் எழுத்தாளர் ரேஷ்மா கட்டவால் இந்த கதை எழுதப்பட்டது. ஒரு பெண் தன் படிப்பை எப்படி பின்தொடர முடியாமல் போனது, எவ்வாறு திரையுலகிற்கு வந்தார் என்பதையும் மையமாக கொண்டது. நாவலை தான் முழுமையாக படிக்கவில்லையெனவும், நாவலிலிருந்து சிலவற்றை மட்டுமே எடுத்துக்கொண்டதாகவும் விளக்கமளித்துள்ளார். 

queen

ரம்யா கிரிஷ்ணனுக்காக எழுதிய கதை இது. அவரை தவிர வேறு யாரும் இக்கதாபாத்திரத்திற்கு கட்சிதமாக இருக்கமுடியாது. அவர் வெப் சீரிஸில் நடிக்க ஒப்புக்கொள்வாரா என பயந்தோம் அனால் அவர் சம்மதம் தெரிவித்தார். மேலும், இக்கதை எழுதும் பொது ரேஷ்மா கண்ணீர் வடித்தார். நாங்கள் அவரோடு உடனிருந்து அவரை ஊக்கபடுத்தி கதையை எழுத வைத்தோம், இக்கதை அவ்வளவு உயிரோட்டமுள்ளது என்றும் கெளதம் வாசுதேவ் மேனன் தெரிவித்தார். 
சீரிஸில், சக்தி கதாபாத்திரம் பேசக்கூடிய வகையில் இருக்கும். இதில் ஜெயலலிதாவின் சாயல் இருந்தால் அதற்கு நங்கள் எதுவும் செய்ய இயலாது என்றும் கௌதம் தெரிவித்துள்ளார்.

gvm

இதுகுறித்து ரம்யாவிடம் கேட்டபோது, ஒரு பெண் எப்படி இவ்வளவு தடைகளை சந்தித்தார் என்றும், வாழ்க்கை முழுவதும் தடைகளை மட்டுமே கொண்ட வலிமையான பெண்ணின் கதைதான் குயின் என்றும் தெரிவித்தார்.