வெப்ப சலனம் காரணமாக 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

 

வெப்ப சலனம் காரணமாக 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

புயல் ஏதும்  உருவாகவிட்டாலும்  இயல்பான மழை பொய்யுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் ஓரிரு நாட்களுக்குள் முடிவுக்கு வந்துவிடும். இந்த முறை புயல் ஏதும்  உருவாகவிட்டாலும்  இயல்பான மழை பொய்யுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ttn

இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிலும்  குறிப்பாக ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், வடதமிழகத்தில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ttn

அதேபோல் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.