வெப்பச்சலனம் காரணமாக மே 3-ஆம் தேதி வரை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

 

வெப்பச்சலனம் காரணமாக மே 3-ஆம் தேதி வரை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக மே 3-ஆம் தேதி வரை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக மே 3-ஆம் தேதி வரை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாக இன்று முதல் மே 3-ஆம் தேதி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ttn

அத்துடன் மாநிலத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. மேலும் மணிக்கு 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.