வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 

 

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களிலும், நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. மேலும் நெல்லை, தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

ttn

அதேநேரத்தில், குமரிகடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு ஒட்டிய பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் அந்த கடல்பகுதிக்கு மீனவர்கள் அடுத்த 24 மணிநேரத்திற்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், தருமபுரி, வேலூர் மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில்  40 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பநிலை பதிவாகும் என்பதால், அடுத்த 3 நாட்களுக்கு முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.