வென்ற/தோற்ற வேட்பாளர்கள் அனைவருக்கும் அவசர உத்தரவு – காங்கிரஸ் மேலிடம்

காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் காங்கிரஸ் மேலிடம் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் பூத் வாரியாக, ஒவ்வொரு வாக்காளரும் பெற்ற வாக்குகள் குறித்த புள்ளிவிவரங்களை தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வேட்பாளருக்கும் அனுப்பி வைக்கும். இந்த ஆவணத்தை வருகிற ஏழாம் தேதிக்குள் அனைத்து வேட்பாளர்களும் கட்சி தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

Congress Headquarters

பூத்வாரியான நிலவரம், எந்தெந்த தொகுதியில் எத்தனை சதவிகித ஓட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சரிபார்ப்பதன்மூலம், தேர்தல் தோல்விக்கான காரணங்களை துல்லியமாக அறிந்துகொள்ள இந்த ஏற்பாடாம். தேர்தலுக்கு முன்பாக வலுவாக இருந்ததாக கருதப்பட்ட இடங்களையும், தேர்தலுக்கு பிந்தைய நிலவரத்தையும் ஒப்பிட்டு, அதற்கேற்றாற்போல், கட்சியின் அடிப்படை கட்டமைப்புமுதல் மாற்றப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.