வென்டிலேட்டர் வாங்க செந்தில் பாலாஜி ஒதுக்கிய நிதியை நிராகரித்த கரூர் மருத்துவமனை! – ஸ்டாலின் கண்டனம்

வென்டிலேட்டர் வாங்க செந்தில் பாலாஜி ஒதுக்கிய நிதியை நிராகரித்த கரூர் மருத்துவமனை! – ஸ்டாலின் கண்டனம்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கிய நிதி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிராகரித்திருப்பதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைய தொடங்கிய நிலையில் தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அந்த அந்த பகுதி மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதி ஒதுக்கீடு செய்தனர்.

senthil-balaji

அந்த வகையில் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடியே மூன்று லட்சம் அளவுக்கு நிதியை கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி ஒதுக்கினார். இதில், கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வென்ட்டிலேட்டர் பற்றாக்குறை இருப்பதை அறிந்து ரூ.60 லட்சம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் நிதி அரவக்குறிச்சி தொகுதிக்குள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று கூறி ரூ.60 லட்சத்தைத் திருப்பி அனுப்பிவிட்டனர்.

karur-medical-collge

கரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு என்றால் அனைவரும் கரூர் மாவட்டத்துக்கு மட்டுமே செல்லும் நிலையில் அங்கு வென்டிலேட்டர் பற்றாக்குறையால் பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தலைமைச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி ஒதுக்கிய நிதியை நிராகரித்திருப்பதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒதுக்கிய நிதியை முதலில் ஏற்றுக்கொண்ட நிர்வாகம் பின்னர் மறுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அரசியல் சூழ்ச்சி செய்ய இது நேரமன்று. தமிழக முதல்வர் கவனிக்கவும்!” என்று கூறியுள்ளார்.