வென்டிலேட்டர் உதிரிபாகங்கள் சென்னை வந்தன… நிறுவனங்களுக்கு விரைவாக அளித்த சுங்கத்துறை அதிகாரிகள்!

வென்டிலேட்டர் உதிரிபாகங்கள் சென்னை வந்தன… நிறுவனங்களுக்கு விரைவாக அளித்த சுங்கத்துறை அதிகாரிகள்!

வெளிநாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட வென்டிலேட்டர் கருவியின் உதிரி பாகங்கள் சென்னை வரத் தொடங்கியுள்ளன. விரைவில் இவை தேவைப்படும் மருத்துவமனைகளில் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட வென்டிலேட்டர் கருவியின் உதிரி பாகங்கள் சென்னை வரத் தொடங்கியுள்ளன. விரைவில் இவை தேவைப்படும் மருத்துவமனைகளில் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. அவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்க வென்டிலேட்டர் அதிக அளவில் தேவைப்படும் என்று எச்சரிக்கை வெளியானதால் மருத்துவமனைகளில் வென்டிலேட்டர் கருவிகள் அதிக அளவில் வாங்க ஆர்டர் செய்யப்பட்டன. இப்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க பல தனியார் மருத்துவ கருவிகள் விற்பனை நிறுவனங்களும் வென்டிலேட்டர் கருவிகளை அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளன. 

CHENNAI-CARGO

இப்படி வெளிநாட்டில் ஆர்டர் செய்யப்பட்டதில் அமெரிக்கா மற்றும் சீனாவில் இருந்து மட்டும் வென்டிலேட்டர் கருவிக்கான உதிரி பாகங்கள் 125 பார்சல்களில் சென்னைக்கு வந்து சேர்ந்துள்ளது. மேலும் இவற்றோடு மருந்துகளும் அனுப்பப்பட்டு இருந்தன. விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் விரைவாக அவற்றை பரிசோதனை செய்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

CBIC-78

இவற்றைக் கொண்டு உருவாக்கப்படும் வென்டிலேட்டர் கருவிகள் தேவை அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு அனுப்பிவைத்த ரேப்பிட் டெஸ்டிங் கிட் வருகை காரணமாக தமிழகத்தில் சோதனைகள் விரைவாக நடைபெறும் என்றும், இதன் மூலம் நோயாளிகள் கண்டறியப்பட்டால் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.