வெத்துக் கெத்து காட்டும் திமுக நிர்வாகிகள்… அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்..!

 

வெத்துக் கெத்து காட்டும் திமுக நிர்வாகிகள்… அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்..!

மாவட்டச் செயலருக்கு எதிராக கெத்து காட்ட சேகர் தரப்பும், 20 – 30 ஆயிரம் ரூபாய் என பணத்தை செலவழித்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறார்.

வடசென்னை  தி.மு.க.,பில் கோஷ்டி கானம் ஓங்கி ஒலித்து வருகிறது. தி.மு.க., வடசென்னை வடக்கு மாவட்டச் செயலர் மாதவரம் சுதர்சனம் ஒரு அணியாகவும், பெரம்பூர் எம்.எல்.ஏ., சேகர், மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறார்கள். 

சுதர்சனத்துக்கு எதிரான கோஷ்டி வடசென்னை கட்சி நிகழ்ச்சிகளுக்கு, அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவனை, சிறப்பு விருந்தினராக வரவழைக்கிறார்கள். அவர்களும் மாவட்டச் செயலரிடம் தெரிவிக்காமல், நிகழ்ச்சிகளுக்கு வந்துவிட்டு போய் விடுகிறார்கள். 

இது சம்பந்தமாக ஏற்கனவே ஸ்டாலின் வரை புகார் போய் ஆறு மாதமாக அவர்கள் வடசென்னை பக்கம் தலைகாட்டாமல் இருந்தார்கள். இப்போது மீண்டும்  சேகர் அழைப்பை ஏற்றுக் கொண்டு  சுதர்சனமும், டி.கே.எஸ் இளங்கோவனும்  வடசென்னையில்  வலம் வருகிறார்கள்.  மாவட்டச் செயலருக்கு எதிராக கெத்து காட்ட சேகர் தரப்பும், 20 – 30 ஆயிரம் ரூபாய் என பணத்தை செலவழித்து  நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறார்.