வெண்ணிற ஆடை மூர்த்தி 83வது பிறந்தாள் இன்று!

 

வெண்ணிற ஆடை மூர்த்தி 83வது பிறந்தாள் இன்று!

“இதுவரைக்கும் நடித்ததே போதும். இனி நடிக்கப் போவதில்லை. இனி நடிப்பதில்லை என்பதை முறைப்படி தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தெரிவித்து விட்டேன்” என்கிறார் மூர்த்தி. நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடிக்கும் பாக்கியம் எல்லாம் எத்தனை பேருக்கு வாய்க்கும்? வாழ்வாங்கு வாழ வாழ்த்துவோம்!

1965 ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியான ‘வெண்ணிற ஆடை’ படத்தில்தான் ஜெயலலிதா, நிர்மலா, மூர்த்தி ஆகியோர் அறிமுகம் ஆகிறார்கள். நிர்மலாவுக்கும் ,மூர்த்திக்கும் வெண்ணிற ஆடையே அடையாளமாகிப்போகிறது. இந்த 54 வருடங்களில் 917 படங்களில் நடித்து வாழ்வாங்கு வாழும் வெண்ணிற ஆடை மூர்த்திக்கு இன்று 83வது பிறந்த நாள். பி.எல். பட்டதாரியான மூர்த்தி, ‘சித்ராலயா’ சினிமா வார இதழின் ஆசிரியராக இருந்தபோது கிடைத்த வாய்ப்புதான் வெண்ணிற ஆடை. கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த ‘மாலை சூடவா’ படத்தின் திரைக்கதையை எழுதியதும் மூர்த்திதான். இவரின் துல்லியமான சோதிட கணிப்புகளுக்கு ஜெயலலிதா ரசிகை.

Vennira Aadai Murthy

மூப்பின் காரணமாகவும், அமெரிக்காவில் இருக்கும் மகனுடன் சென்று அடிக்கடி தங்கிவிடுவதாலும், சினிமாவிலிருந்து விலகி இருந்த மூர்த்தி, இனிமேல் நடிப்பதில்லை என்ற  முடிவெடுத்திருக்கிறார். “இதுவரைக்கும் நடித்ததே போதும். இனி நடிக்கப் போவதில்லை. இனி நடிப்பதில்லை என்பதை முறைப்படி தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தெரிவித்து விட்டேன்” என்கிறார் மூர்த்தி. நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடிக்கும் பாக்கியம் எல்லாம் எத்தனை பேருக்கு வாய்க்கும்? வாழ்வாங்கு வாழ வாழ்த்துவோம்!