வெட்டி ஒட்டிய வீடியோ… போன் நம்பரை கொடுத்து மாட்டிக் கொண்ட ஜோதிமணி..!

 

வெட்டி ஒட்டிய வீடியோ… போன் நம்பரை கொடுத்து மாட்டிக் கொண்ட ஜோதிமணி..!

போன் போட்டு கேளுங்கள் என மக்களை தூண்டிவிட்டது அவர்கள் தான். பாராளுமன்றத்தில் அன்று சில வினாடிகள் கண்களை மூடி இருக்கிறார்.

கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி வாரம் ஒருமுறையாவது எதிரிகளால் சித்தரிக்க கூடிய செய்தி சமூக வலைதளங்களில் ஆக்கிரமித்து விடும். சில நாட்களுக்கு முன் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மணி திவாரி நரம்புகள் புடைக்க பேசிக்கொண்டிருந்தார்.jothymani

கூச்சல், குழப்பம், காரசாரமான விவாதம் என அவையே பரபரப்பு மூழ்கியிருக்க, ஜோதி மொழியோ அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். பின்புற வரிசையில் இது எதுவும் காதில் விட வேண்டாம் என்பதற்காகவே ஹெட்போன் மாட்டிக்கொண்டது போல் நிம்மதியான உறக்கம். இந்த காட்சி செய்தி நிறுவனங்களை விட சோசியல் மீடியாக்களில் அதிகம் வலம் வந்தது. இதைப் பார்த்தவர்கள் பலரும் பேஸ்புக், வாட்ஸ்அப்களில் பகிர கரூர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் தாக்கம் குறைவதற்குள் எழுத்தாளர் மாரிதாஸ், ஜோதி மணியை மட்டும் மையப்படுத்தி தனி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். கரூர் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் குறிப்பிட்டு அந்த வாக்காளர்களை உசுப்பி விடுவது போல அதில் பேசியிருந்தார். ஜோதிமணி மக்களவையில் இதுவரை 28 கேள்விகள் கேட்டு கேட்டு உள்ளார். அதில் ஒன்று கூட கரூர் பகுதிக்கு மக்களுக்கு ஒரு சம்பந்தம் இல்லாத ஒன்று. எந்த விஷயத்தைப் பற்றி பேசினாலும் பப்ளிசிட்டி கிடைக்கும் போது மீடியாக்களின் கவனம் இருக்குமோ அதை மட்டுமே முன்னிலைப் படுத்தி இருந்தார்.jothimani

சுய விளம்பரம் தேடிக் கொள்வதற்காக தான் நீங்கள் இவரை தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அனுப்பி வைத்தீர்களா? தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு பத்திரிகையும், ஒரு தொலைக்காட்சியும் இவர் என்ன சொன்னாலும் செய்தியாகும் அதனால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என இவர் நடந்து கொள்கிறார். மத்திய அரசு நிதி ஒதுக்கி விட்டு மற்றவர்கள் எல்லாம் அதைப் பெற்று சாலை வசதி குடிநீர் மின்சாரம் என தொகுதி முழுக்க மக்களுக்கு செலவிட்டு வருகிறார்கள். ஆனால் ஜோதிமணி இதுவரை அந்த பணத்தை பெறவில்லை. முக்கிய விவாதம் நடத்தும் போது தூங்கி விடுகிறார்.

இந்த தூங்கு ராணி கரூர் வரும்போது விடாமல் கேள்வி எழுப்புங்கள் என்கிறார் மாரிதாஸ். அந்த வீடியோ பதிவு ஜோதிமணி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி வருகிறார். இவர் தேர்தல் பிரச்சாரத்தின்போது தம்பிதுரை இங்கு நான்கு முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அவரது செல்போன் எண் இங்குள்ள மக்களுக்கு யாருக்காவது தெரியுமா? ஏன் கட்சியின் கிளை செயலாளர்கள் கூட போன் செய்து பேசி இருக்க மாட்டார். ஆனால் என்னுடைய செல் போனுக்கு யார் வேண்டுமானாலும் அழைத்துக் குறைகளை தெரிவிக்கலாம். உடனடியாக முடித்துக் கொடுப்பேன் என பேசியிருந்தார்.

வெற்றி பெற்று சென்ற பிறகு போன் செய்தால் எடுப்பதில்லை என பொதுமக்கள் சில இடங்களில் முகத்தை வைத்து பல நாள் பல நாளிதழ்களில் செய்தி வெளியானது. இதுபோல் முன்பு அமராவதி மற்றும் காவிரி ஆற்றில் மணல் எடுக்க கூடாது என பல போராட்டங்களில் ஈடுபட்டார். நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடர்ந்தார். இப்போது திமுகவினர் உடன் சேர்ந்து கொண்டு மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுக்கிறார். jothymani

ஓட்டுப்போட்ட மக்களை ஏமாற்றும் செயல் இது. மணப்பாறையில் கிணற்றில் விழுந்த சிறுவன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான். மீட்புப் பணியில் அரசும் அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். நாடே அந்த சிறுவனுக்கு அந்த பிரார்த்தனையின் மூழ்கியிருந்தது. இந்த சூழ்நிலையில் அங்கே போன ஜோதிமணி மீடியாக்கள் ஆளும் கட்சியினரை மட்டுமே காட்டிக் கொண்டிருக்கிறார்கள். எங்களின் கருத்துக்களை காட்டுவதில்லை என கூறியிருந்தார். பிற அரசியல் கட்சியினர் மட்டுமல்லாது பொது மக்களையும் முகம் சுளிக்க வைத்தது இந்த சம்பவம்.

இப்போது நாடாளுமன்றத்தில் தூங்கி ஓட்டு போட்ட மக்களை யோசிக்க வைத்து விட்டார் என்கிறார்கள் அதிமுகவினர் சிலர். ஜோதிமணியின் கருத்தை அறிய அவரை தொடர்பு கொண்டால் அவர் செல்போன் இணைப்பை துண்டித்து விடுகிறார். அவரது ஆதரவாளர்கள் சிலரும் ஜோதிமணி பற்றி அவதூறு பரப்புவது ஆளும் தரப்பின் அதைவிட இங்குள்ள காங்கிரஸ்காரர்கள் தான் அதிகம் ஈடுபடுகிறார்கள். போன் போட்டு கேளுங்கள் என மக்களை தூண்டிவிட்டது அவர்கள் தான். பாராளுமன்றத்தில் அன்று சில வினாடிகள் கண்களை மூடி இருக்கிறார். அந்த வீடியோ காட்சிகள் காட்சியை வெட்டி ஒட்டி ஸ்லோமோஷனில் நீண்ட நேரம் தூங்குவது போல் காட்டப்பட்டுள்ளது.

அவர் தூங்கிக் கொண்டிருப்பது போல் தெரிகிறது. சர்ச்சைகள் தொடர்ந்து துரத்துகிறது என்றால் அவர் வளர்ந்து வருகிறார்’’ என்கிறார்கள்.