வெட்டிய மரம் குளவிக்கூட்டில் விழுந்ததில், குளவி கொட்டி தொழிலாளி உயிரிழப்பு!

 

வெட்டிய மரம் குளவிக்கூட்டில் விழுந்ததில், குளவி கொட்டி தொழிலாளி உயிரிழப்பு!

குளவி கொட்டினால், உடனே கொட்டிய இடத்தில் இருக்கும் கொடுக்கினை நீக்கிவிட்டு, சோப்பு போட்டு அந்த இடத்தை சுத்தம் செய்து, குளவி கொட்டிய இடத்தில் ஐஸ்கட்டிவைக்கவேண்டும்.

கேரளா, கண்ணூர் மாவட்டத்தின் ரப்பர் தோட்டத்தில் இருந்த மரத்தை ஐந்து கூலி தொழிலாளர்கள் சேர்ந்து வெட்டியிருக்கின்றனர். வெட்டுப்பட்ட மரம் இன்னொரு மரத்தின்மீது மோதியதில், அந்த மரத்தில் கூடுகட்டியிருந்த குளவிகள் கூட்டில் விழுந்து குளவிகள் துரத்த ஆரம்பித்திருக்கின்றன. மற்ற நான்கு தொழிலாளர்களும் வேகமாக ஓடி தப்பிய நிலையில், 55 வயதான பாபுவால் குளவிகளிடமிருந்து தப்ப முடியவில்லை. குளவிகள் கொட்டி குதறியதில், மயக்கமுற்ற பாபுவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். ஆனாலும் அவரை காப்பாற்ற முடியவில்லை.

Wasp Attack

ஒருமுறை கொட்டி தன் எதிர்ப்பை பதிவுசெய்துவிட்டு தேனீக்கள் இறந்துவிடும், ஆனால் குளவிகள் அப்படியல்ல. அவற்றால் தொடர்ந்து ஒரு மனிதனை கொட்டிக்கொண்டே இருக்கமுடியும். சராசரியாக 30 அல்லது 40 முறை குளவி கொட்டி சிகிச்சை தாமதித்தால் மரணம் சம்பவிக்கும். குளவி கொட்டினால், உடனே கொட்டிய இடத்தில் இருக்கும் கொடுக்கினை நீக்கிவிட்டு, சோப்பு போட்டு அந்த இடத்தை சுத்தம் செய்து, குளவி கொட்டிய இடத்தில் ஐஸ்கட்டிவைக்கவேண்டும். எவ்வளவு விரைவாக‌ சிகிச்சைக்காக மருத்துவரை அணுகமுடியுமோ அவ்வளவு விரைவாக அணுகுதல் சிறப்பு.