வெட்கமில்லாத பாலியல் வக்கிரம் கொண்ட ரஞ்சன் கோகோய்! – மார்கண்டேய கட்ஜு தாக்கு

வெட்கமில்லாத பாலியல் வக்கிரம் கொண்ட ரஞ்சன் கோகோய்! – மார்கண்டேய கட்ஜு தாக்கு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் ரஞ்சன் கோகோய். இவர் தலைமையிலான அமர்வுதான் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி விவகாரத்தை விசாரித்துத் தீர்ப்பு வழங்கியது. மேலும், மத்திய அரசுக்கு அனுசரணையாக இருந்ததாக இவர் மீது குற்றச்சாட்டும் உண்டு.

நாடாளுமன்ற நியமன உறுப்பினர் பதவியை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயை வெட்கமில்லாத, பாலியல் வக்கிரம் கொண்டவர் என்று முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கடுமையாக விமர்சித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் ரஞ்சன் கோகோய். இவர் தலைமையிலான அமர்வுதான் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி விவகாரத்தை விசாரித்துத் தீர்ப்பு வழங்கியது. மேலும், மத்திய அரசுக்கு அனுசரணையாக இருந்ததாக இவர் மீது குற்றச்சாட்டும் உண்டு.

Ranjan Gogoi

பதவியிலிருந்து ஓய்வு பெற்ற ரஞ்சன் கோகோய்க்கு மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு ஆதரவாக நடந்துகொண்டதால் அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், நீதித் துறை பற்றி நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்கவே இந்த பதவியை ஏற்றக்கொண்டேன் என்று ரஞ்சன் கோகோய் கூறியிருந்தார்.
இந்த நிலையில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரஞ்சன் கோகோயை மிகக் கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளார். அதில், “நான் 20 வருடம் வழக்கறிஞராகவும், 20 வருடம் நீதிபதியாகவும் இருந்தேன். பல நல்ல மற்றும் பல மோசமான நீதிபதிகளை நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இந்திய நீதித்துறையில் எந்தவொரு நீதிபதியையும் இந்த பாலியல் வக்கிரமான ரஞ்சன் கோகோய் போல வெட்கமில்லாத மற்றும் அவமானகரமான ஒருவரை நான் இது வரை அறிந்ததில்லை” என்று கூறியுள்ளார்.