‘வெட்கப்படாமல் வாக்காளர்களின் காலில் விழுங்கள்’ : அமைச்சர் செல்லூர் ராஜு அட்வைஸ்!

 

‘வெட்கப்படாமல் வாக்காளர்களின் காலில் விழுங்கள்’ : அமைச்சர் செல்லூர் ராஜு அட்வைஸ்!

இதில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் ராஜன் செல்லப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் அமமுகவிலிருந்து விலகிய 500 பேர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் ராஜன் செல்லப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

ttn

இதை தொடர்ந்து மேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். அப்போது வேட்பாளர்கள் மத்தியில்  பேசிய செல்லூர் ராஜு,  கூச்சப்படாமல் வீடு வீடாகச் சென்று வாக்காளர்கள் காலில் விழுந்து ஓட்டு கேளுங்கள்’ என்று அறிவுரை வழங்கியுள்ளார். இதனால் கூட்டத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.