வெடித்தது ஓ.பி.எஸ் -எடப்பாடி மோதல்… உடைகிறது அதிமுக..? விடிய விடிய நடந்த பஞ்சாயத்து..!

 

வெடித்தது ஓ.பி.எஸ் -எடப்பாடி மோதல்…  உடைகிறது அதிமுக..? விடிய விடிய நடந்த பஞ்சாயத்து..!

உங்களுக்குத்தான் எனது ஆதரவு. தேவைப்பட்டால் பன்னீர்செல்வத்தை வெளியேற்றக் கூட நான் தயங்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அதிமுகவுக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்க பாஜ மேலிடம் முடிவு செய்திருந்தது.  அதை ஓ.பன்னீர்செல்வம் தனது மகனுக்கு அமைச்சர் பதவி வழங்க லாபி செய்து வந்தார்.  ஆனால், வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி கேட்டு வந்தார்.  ops

ரவீந்திரநாத்துக்கு கொடுத்தால், டெல்லி மேலிடத்துடன் நெருக்கமாகிவிடுவார். அது தனக்கும், தனது பதவிக்கும் ஆபத்து என்று கருதினார் எடப்பாடி. இதனால் வைத்திலிங்கத்தை அழைத்து உங்களுக்குத்தான் எனது ஆதரவு. தேவைப்பட்டால் பன்னீர்செல்வத்தை வெளியேற்றக் கூட நான் தயங்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். modi

இரு தலைவர்களுக்கிடையே மோதல் எழுந்ததால், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சென்றனர். நள்ளிரவு 1.30 மணி வரை பன்னீர்செல்வத்தை, சமாதானப்படுத்தினர். ஆனால் பன்னீர்செல்வம் விட்டுக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பிரதமரே என் மகனுக்குத்தான் அமைச்சர் பதவி கொடுக்க விரும்புகிறார். நான் எப்படி அதை வேண்டாம் என்று சொல்ல முடியும் என்று கூறிவிட்டார். OPR

இதனால் அதிகாலை வரை நடந்த சமரச முயற்சி தோல்வியில் முடிந்தது. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று முன்தினம் இரவே டெல்லி செல்வதாக திட்டமிட்டிருந்தனர். அதற்காக டிக்கெட் பதிவு செய்திருந்தனர். ஆனால் இந்த பஞ்சாயத்தால் பயணத்தை ரத்து செய்தனர். ஆனாலும் பஞ்சாயத்தில் தீர்வு கிடைக்கவில்லை. அதிமுக தலைவர்களுக்குள் எழுந்த மோதலில் யாருக்கும் அமைச்சர் பதவி இல்லை என்று பாஜக கை விரித்து விட்டுள்ளதாக கூறுகிறார்கள் அதிமுக மூத்த தலைவர்கள்.