வெடிகுண்டு மிரட்டல்: ஒய்வு பெற்ற ராணுவவீரர் கைது!

 

வெடிகுண்டு மிரட்டல்: ஒய்வு பெற்ற  ராணுவவீரர் கைது!

தமிழகத்தில் ரயில்களில் தாக்குதல் நடத்தப்படும் என்று வதந்தி பரப்பியவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூர் : தமிழகத்தில் ரயில்களில் தாக்குதல் நடத்தப்படும் என்று வதந்தி பரப்பியவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

chennai

பெங்களூர் போலீசார்  எச்சரிக்கை கடிதம் ஒன்றை தமிழக காவல்துறையினருக்கு அனுப்பி இருந்தனர்.  அதில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவுள்ளதாகவும்,  ராமநாதபுரத்தில் 19 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாகவும்  கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.  இது குறித்து பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு லாரி ஓட்டுநர் சுவாமி சுந்தர் தகவல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

police

இதையடுத்து தமிழகத்தில் ரயில் நிலையங்கள் உள்பட பல இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டதோடு பாம்பன்பாலத்திலும்  தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

arrrt

இருப்பினும் தொலைபேசி குறித்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த நபரின் பெயர் சுந்தர மூர்த்தி என்று தெரியவந்துள்ளது. அவர் முன்னாள் ராணுவ வீரர் என்றும் தற்போது லாரி ஓட்டுநராக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.  இவர் பயங்கரவாத தாக்குதல் என்று வதந்தி பரப்பியதால் பெங்களூரூவில் இன்று கைதாகியுள்ளார். மேலும் வதந்தி பரப்பியதற்கான காரணம்  என்னவென்று போலீசார் அவரிடம்  தீவிர விசாரணையில் எடுப்பிரு வருகின்றனர்.