வெங்காய விலை கடும் வீழ்ச்சி… ரூ 1,064-ஐ பிரதமருக்கு மணியார்டர் செய்த விவசாயி

 

வெங்காய விலை கடும் வீழ்ச்சி…  ரூ 1,064-ஐ பிரதமருக்கு மணியார்டர் செய்த விவசாயி

750 கிலோ வெங்காயம் ரூ 1.40க்கு விலை போனதால் அதில் கிடைத்த பணத்தை பிரதமருக்கு நாசிக்கை சேர்ந்த விவசாயி மணியார்டர் அனுப்பி வைத்த சம்பவம் நடந்துள்ளது.

மும்பை: 750 கிலோ வெங்காயம் ரூ 1.40க்கு விலை போனதால் அதில் கிடைத்த பணத்தை பிரதமருக்கு நாசிக்கை சேர்ந்த விவசாயி மணியார்டர் அனுப்பி வைத்த சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தை சேர்ந்தவர் விவசாயி சஞ்சய் சாதே, இவர் தனது நிலத்தில் வெங்காயம் விளைவித்தார். அதனை அறுவடை செய்ததும் மொத்தம் 750 கிலோ வெங்காயம் கிடைத்துள்ளது. எனவே அதனை விற்பனை செய்ய மகிழ்ச்சியோடு அவர் நாசிக் சந்தைக்கு எடுத்து சென்றார்.

ஆனால் அங்கு அவருக்கு அதிர்ச்சி தரும் விதமாக ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்க்கு மட்டுமே விலை போனது. எவ்வளவோ சஞ்சய் போராடி பார்த்தும் அதற்கு மேல் வெங்காயம் விலை போகவில்லை. எனவே மனம் நொந்து போய் அவர் வெங்காயம் கிலோ ரூ 1.40-க்கு விற்றார்.

இதனையடுத்து மிகுந்த மனச்சோர்வு அடைந்த சஞ்சய் வீட்டிற்கு திரும்பியதும் வெங்காயம் விற்றதால் வந்த பணத்தோடு சேர்த்து கூடுதலாக ரூ 54 ரூபாயை போட்டு ரூ 1,064-ஐ பிரதமர் மோடிக்கு மணியார்டர் அனுப்பி வைத்தார். தனது தலைமையிலான அரசு விவசாயிகளுக்கான அரசு என பிரதமர் மோடி கூறி வரும் சூழலில் 750 கிலோ ஒரு ரூபாய்க்கு விலை போனதால் அந்த பணத்தை அவருக்கே மணியார்டர் அனுப்பி வைத்து, உங்கள் அரசின் காலத்தில் விவசாயிகளின் நிலை இப்படித்தான் இருக்கிறது என சஞ்சய் சாதே உணர்த்தி இருக்கிறார் என பல்வேறு தரப்பினர்கள் கூறி வருகின்றனர்.