வெங்காய லாரியின் குறுக்கே வந்த பன்றிகள்.. பிரேக் போட்டதால் நடந்த விபத்து !

 

வெங்காய லாரியின் குறுக்கே வந்த பன்றிகள்.. பிரேக் போட்டதால் நடந்த விபத்து !

இன்று காலை ஆந்திர மாநிலத்தில் இருந்து 10 டன் வெங்காயங்களை ஏற்றுக் கொண்டு லாரி ஒன்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்து கொண்டிருந்துள்ளது.

தமிழகத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஒரு போக சாகுபடி வெங்காயங்கள் முழுவதுமாக அழுகி நாசமாகின. இதனால், வெங்காயங்களுக்கான உள்ளூர் வரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வெங்காயங்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கும், ஒட்டன் சத்திரம் சந்தைக்கும் கொண்டு வரப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று காலை ஆந்திர மாநிலத்தில் இருந்து 10 டன் வெங்காயங்களை ஏற்றுக் கொண்டு லாரி ஒன்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்து கொண்டிருந்துள்ளது.  அந்த லாரி திருவள்ளூர் பழைய டோல்கேட் அருகே வந்து கொண்டிருக்கும் போது லாரியின் குறுக்கே பன்றிகள் சென்றுள்ளன. 

tn

இதனால் அந்த லாரி டிரைவர் உடனே பிரேக் போட்டுள்ளார். அப்போது அந்த லாரி சாலையின் அருகே இருந்த பக்கவாட்டு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.  இதில் லாரியின் முன் பகுதி சேதம் அடைந்து, லாரியில் இருந்த வெங்காய மூட்டைகளில் பாதி சாலையில் கொட்டியுள்ளது. அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவரும் அவருடன் வந்த நபரும் காயங்களுடன் உயிர் தப்பினர். அதன் பின்னர், வெங்காயங்கள் அனைத்தும் வேறு லாரி மூலம் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.