வெங்காய ஏற்றுமதிக்கு தடை! மத்திய அரசு அதிரடி!

 

வெங்காய ஏற்றுமதிக்கு தடை! மத்திய அரசு அதிரடி!

வழக்கமாக புரட்டாசி மாதம் பிறந்தாலே காய்கறிகளின் விலை  றெக்க கட்டிக் கொண்டு உயரத்திற்கு ஏறி விடும்.

வழக்கமாக புரட்டாசி மாதம் பிறந்தாலே காய்கறிகளின் விலை  றெக்க கட்டிக் கொண்டு உயரத்திற்கு ஏறி விடும். அதன் பின்னர், கார்த்திகை எல்லாம் முடிந்து தை மாதத்திற்கு பிறகு தான் விலை குறைய துவங்கும். இம்முறை வழக்கத்தை விட முன்னதாகவே வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து விண்ணைத் தொடத் துவங்கியது.

Onion

இந்நிலையில், வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு திடீர் தடை விதித்திருக்கிறது. மறு அறிவிப்பு வரும் வரையில், இனி வெங்காயத்தை யாரும் ஏற்றுமதி செய்யக்கூடாது என்றும் அறிவித்திருக்கிறது.

மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கன மழையால் வெங்காயத்தின் விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, சந்தையில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து உச்சத்தை தொட்டுள்ளது.

மத்திய வர்த்தக அமைச்சகம்

இந்நிலையில், உள்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக, அனைத்து வகையான வெங்காயங்களையும் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்படுவதாக மத்திய வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது.