வெங்காயத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டம் 

 

வெங்காயத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டம் 

விலையேற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

விலையேற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

மக்களின் அன்றாட சமையலில் தவிர்க்க முடியாத பொருளான வெங்காயம் சதத்தை அடித்துள்ளது. சமீப காலமாக பெய்துவரும் மழையால் வெங்காயம் அழுகியதாலும், உற்பத்தி குறைந்ததாதுமே இந்த விலை ஏற்றத்துக்கு காரணம் என வியாபாரிகளும் விவசாயிகளும் தெரிவிக்கின்றனர்.  வரும் நாட்களில் மழை தொடரும் என்பதால் வெங்காயம் விலைக்குறைய வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது. 

Onion

இந்நிலையில் வெங்காய விலையுயர்வு குறித்து அமைச்சர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக்கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் பங்கேற்றனர். இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, “வெங்காயத்தை பதுக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. சில்லரை வியாபாரிகள் 10 மெட்ரிக் டன்னும், மொத்த வியாபாரிகள் 50 மெட்ரிக் டன்னுமே இருப்பு வைத்திருக்க வேண்டும்” என தெரிவித்தார். இதனிடையே எகிப்து, துருக்கி, ஈரானிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.