வெங்காயத்தை தொடர்ந்து பூண்டின் விலையும் கிடுகிடு உயர்வு!

 

வெங்காயத்தை தொடர்ந்து பூண்டின் விலையும் கிடுகிடு உயர்வு!

பூண்டு அதிகமாக உற்பத்தி செய்யப்படும் இடங்களான மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் மழை அதிகமாக பெய்து வருவதால் பூண்டு உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது. அதனால், தமிழகத்திற்கு இறக்குமதி ஆகும் பூண்டின் விலையும் உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் உற்பத்தி பாதிக்கப் பட்டதாலும், தமிழகத்திற்கு இறக்குமதி குறைந்ததாலும் பெரிய வெங்காயத்தின் விலை ஒரு கிலோவிற்கு சுமார் 60 முதல் 80 ரூபாய்க்கு விற்கப் பட்டது. அதனால், தமிழக அரசு தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து நுகர்வோர் வாணிப கழகத்திற்கு குறைந்த விலையில் வழங்கப் போவதாகவும் 3 நாட்களில் வெங்காயத்தின் விலை குறையும் என்றும் அறிவித்திருந்தது. 

Garlic

இதனையடுத்து, தற்போது பூண்டு அதிகமாக உற்பத்தி செய்யப்படும் இடங்களான மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் மழை அதிகமாக பெய்து வருவதால் பூண்டு உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது. அதனால், தமிழகத்திற்கு இறக்குமதி ஆகும் பூண்டின் விலையும் உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் இன்றைய நிலவரத்தின் படி ஒரு கிலோ பூண்டு சுமார் 208 ரூபாய்க்கு விற்கப் படுகிறது. மொத்த வியாபாரிகளிடம் இருந்து வாங்கும் சிறிய வியாபாரிகள் சற்று விலையை அதிகரித்தே விற்பர். அதனால், மக்களுக்கு சென்றடையும் பூண்டின் விலை இன்னும் உயர்ந்து சுமார் 230 ருபாய்க்கு விற்கப் படுகிறது. 

உயர்ந்து வரும் அத்தியாவசிய பொருட்களின் விலையால், நடுத்தர மக்கள் பெரும் அதிரிச்சியில் உள்ளனர். மேலும், இந்த விலை உயர்வை கட்டுப் படுத்த அரசு ஏதேனும் முயற்சி செய்யுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகமாகியுள்ளது.