வெங்காயத்தை தொடர்ந்து சத்தமில்லாமல் விலை ஏறிய சமையல் எண்ணெய்!

வெங்காயத்தை தொடர்ந்து சத்தமில்லாமல் விலை ஏறிய சமையல் எண்ணெய்!

வெங்காயம், பூண்டு விலை இரட்டை சதத்தை தாண்டி விற்பனையாகி பொதுமக்களை கதிகலங்க வைத்த நிலையில் தற்போது சமையல் எண்ணெய் விலை அதிகரித்திருப்பது நடுத்தர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

வெங்காயம், பூண்டு விலை இரட்டை சதத்தை தாண்டி விற்பனையாகி பொதுமக்களை கதிகலங்க வைத்த நிலையில் தற்போது சமையல் எண்ணெய் விலை அதிகரித்திருப்பது நடுத்தர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

இந்தியாவில் சமையலுக்காகப் பயன்படுத்தப்படும் எண்ணெய் வித்துகளின் உற்பத்தித் தேவையைவிட குறைவாக உள்ளது. இதனால் பெரும்பாலும் மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து பாமாயில் உள்ளிட்ட சமையல் எண்ணெய் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுவருகிறது. இந்த விலையேற்றம் காரணமாக இந்தியச் சந்தைகள் பாதிக்கப்படவுள்ளது. எண்ணெய் வித்து பயிரான சோயாபீனில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 18 சதவீதம் குறைவாக உற்பத்தியாகியுள்ளது. இதனால் சர்வதேச அளவிலும் சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. 

Cooking Oil

அடுத்த ஆண்டு முதல் இந்தோனேசியா, மலேசியாவில் சிறப்புத் திட்டங்கள் அமலாக்கப்பட உள்ளது. இதனால் அந்நாடுகளில் சமையல் எண்ணெய் நுகர்வு அதிகரிக்கும். இதன் காரணமாக அடுத்த ஆண்டு முதல் சமையல் எண்ணெய் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.