வெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தில் உருளைகிழக்கு விலை.!

 

வெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தில் உருளைகிழக்கு விலை.!

உருளைக்கிழங்கு அதிகம் விளையும் பஞ்சாப், உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம் பகுதிகளில் பெய்த மழையால்  விளைச்சல் குறைந்துள்ளதாம். 

வெங்காய விளைச்சலில் முன்னணியில் இருக்கும் மாநிலங்களில் நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.  இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது.

ttn

 

இந்நிலையில் வெங்காயத்தை தொடர்ந்து உருளைக்கிழங்கின் விலையும் உச்சத்தை எட்டியுள்ளது. உருளைக்கிழங்கு அதிகம் விளையும் பஞ்சாப், உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம் பகுதிகளில் பெய்த மழையால்  விளைச்சல் குறைந்துள்ளதாம். 

ttn

அந்த வகையில் டெல்லியில் ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை 32 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனையாகிறது.  ஆனால் கடந்த ஆண்டு கிலோ  உருளைக்கிழங்கு 18 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்பட்டது. இதேபோல் மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட இடங்களிலும் உருளை விலை எகிறியுள்ளது. தமிழகத்தில் கிலோ உருளைக்கிழங்கு  கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது.