வெங்காயத்தைப் பதுக்கினால் நடவடிக்கை : அமைச்சர் செல்லூர் ராஜு எச்சரிக்கை !

 

வெங்காயத்தைப் பதுக்கினால் நடவடிக்கை : அமைச்சர் செல்லூர் ராஜு எச்சரிக்கை !

இன்றைய நிலவரத்தின் படி, பல்லாரி வெங்காயம் ரூ.90க்கும் சின்ன வெங்காயம் ரூ.180க்கும் விற்கப்படுகிறது.

கடந்த ஒரு மாதமாகப் பெய்த கனமழையின் காரணமாக வெங்காய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகம் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் வெங்காய விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து வெங்காயங்களைக் கொள்முதல் செய்து விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளன. இந்த விலை உயர்வின் காரணமாக, தமிழகத்தில் கோவை, நாமக்கல் ஆகிய பகுதிகளிலிருந்து சின்ன வெங்காயமும், பூனே, சோலாப்பூர், பெங்களூர் பகுதிகளிலிருந்து பல்லாரி வெங்காயமும் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

onion

இன்றைய நிலவரத்தின் படி, பல்லாரி வெங்காயம் ரூ.90க்கும் சின்ன வெங்காயம் ரூ.180க்கும் விற்கப்படுகிறது. இந்த அதிரடி விலை உயர்வின் போது நல்ல லாபம் பார்க்க,  விவசாயிகளிடம் இருந்து வெங்காயங்களைக் கொள்முதல் செய்து அதனைப் பதுக்கி வைத்து வெங்காய விலை உயரும் போது அதிக விலைக்கு விற்கின்றனர். இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

அதில், “தமிழகத்தில் உள்ள மொத்த விற்பனைக் கடைகளில் 50 டன்னுக்கும் அதிகமாக வெங்காயம் வைத்திருக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.வெங்காயப் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.