வெங்காயத்தின் விலை 200 ரூபாயை தாண்டியது: கவலையில் மக்கள்!

 

வெங்காயத்தின் விலை 200 ரூபாயை தாண்டியது: கவலையில் மக்கள்!

சந்தையில் ஒருகிலோ சின்ன வெங்காயம் 140 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 130 ரூபாய்க்கும் விற்பனையாகிறது

தமிழகத்தில் சின்ன வெங்காயம் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு போன்ற பெரிய சந்தையிலேயே வெங்காய விலை உச்சத்தில் இருக்கும் நிலையில் சில்லறை வியாபாரிகளிடம் அதை வாங்கும் பொதுமக்களின் நிலைமை இன்னும் பரிதாபம் தான். 

tn

இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில்  ஒருகிலோ சின்ன வெங்காயம் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.பெரிய வெங்காயம் கிலோ 180க்கு விற்கப்படுகிறது. சில்லறை விற்பனையிலோ வெங்காயம் கிலோ 220 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ttn

இதேபோல் மதுரை காய்கறிச் சந்தையில் ஒருகிலோ சின்ன வெங்காயம் 140 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 130 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. திருச்சியில் சிறிய வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 140 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் சின்ன வெங்காயம் 140 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 170 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இன்னும் இரண்டு மாதங்களுக்கு வெங்காய விலை இப்படி உச்சத்தில் தான் இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.