வெங்காயத்தால் கவலை! – டாக்டர் ராமதாஸ் ட்வீட்

 

வெங்காயத்தால் கவலை! – டாக்டர் ராமதாஸ் ட்வீட்

வெங்காய விலை உயர்வு கவலை அளிக்கிறது என்று டாக்டர் ராமதாஸ் இன்று (சனிக்கிழமை) ட்வீட் செய்துள்ளார்.

onion

நாடு முழுவதும் வெங்காயம், சின்ன வெங்காயம், பூண்டு, முருங்கைக்காய் விலை யானை விலை குரை விலைக்கு விற்கப்படுகிறது. வெங்காயத்தை சில மாதங்களுக்கு மறப்பது நல்லது என்ற அளவுக்கு விலை ஏறிக்கொண்டே செல்கிறது. இது குறித்து பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று இரண்டு ட்வீட் வெளியிட்டுள்ளார். 

அதில், “வெங்காயத்தின் விலை கட்டுப்பாடின்றி அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.240 ஆகவும், சிறிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.200 ஆகவும் அதிகரித்துள்ளது. விலை உயர்வைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் உறுதியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் ஜனவரி மாத மத்தியில் தான் இந்தியா வரும் என்றால், அதனால் பயனில்லை. அதற்குள் உள்நாட்டு வெங்காய அறுவடை தொடங்கி விடும். எனவே, வெளிநாட்டு வெங்காய இறக்குமதியை விரைவுபடுத்த வேண்டும்!” என்று கூறியுள்ளார்.