வெங்கய்ய நாயுடுதான் என்னுடைய குரு- அமித்ஷா!

வெங்கய்ய நாயுடுதான் என்னுடைய குரு- அமித்ஷா!

மக்கள் பணியில் முன்னுதாரணமாக உள்ள வெங்கய்ய நாயுடுவின் மாணவர் நான் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மக்கள் பணியில் முன்னுதாரணமாக உள்ள வெங்கய்ய நாயுடுவின் மாணவர் நான் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதியுள்ள ஆவண புத்தகம், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியிலே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய அமித்ஷா, “வெங்கய்ய நாயுடுவிடம் இருந்து நான் ஏராளமாக கற்றுக்கொண்டுள்ளேன். இந்த விழாவில் ரஜினி பங்கேற்றது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அமைச்சராகவோ, பாஜக தலைவராகவோ இங்கு நான் வரவில்லை. மக்கள் பணியில் முன்னுதாரணமாக உள்ள வெங்கய்ய நாயுடுவின் மாணவராக வந்துள்ளேன். இந்த விழாவில் தமிழில் பேச நினைத்தேன், ஆனால் என்னால் பேச முடியவில்லை” எனக்கூறினார்.