வெங்கட் பிரபு – வைபவ் இடையே மோதல்?!

 

வெங்கட் பிரபு – வைபவ் இடையே மோதல்?!

2017-ஆம் ஆண்டு வெளியான ‘மேயாத மான்’ படத்துக்கு பிறகு வைபவ் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை.

2017-ஆம் ஆண்டு வெளியான ‘மேயாத மான்’ படத்துக்கு பிறகு வைபவ் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. தற்போது ‘சிக்ஸர்’ எனும் படத்தில் நடித்து வரும் வைபவ், நிதின் சத்யா தயாரிப்பில் வேறு ஒரு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

nitin

இந்த படத்தில் வெங்கட் பிரபு அவருக்கு வில்லனாக நடித்து வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

உன்னை சரணடைந்தேன், ஜி, ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட பல்வேறு படங்களில் வெங்கட் பிரபு நடித்துள்ளார். எனினும் தன் நெருங்கிய நண்பர் ஒருவரின் தயாரிப்பில், நெருங்கிய நண்பர் ஒருவருக்கு வில்லனாக நடிப்பது இதுவே முதல்முறை.

ven

இதில் வெங்கட் பிரபு போலீஸ் வில்லன் கதாபாத்திரமாம், சீரியல் நடிகை வாணி போஜன் இதில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மங்காத்தா அஜித் டைப்பில் வெங்கட் பிரபு கதாபாத்திரம் இருக்கும் என கூறப்படுகிறது. எஸ்.ஜி.சார்லஸ் இயக்கும் இந்த படத்தை நிதின் சத்யா, ஸ்வேத் க்ரூப் என்ற பேனரின் கீழ் தயாரித்து வருகிறார்.