வெகு நாட்களுக்குப் பிறகு குறைந்தது தங்க விலை..!

 

வெகு நாட்களுக்குப் பிறகு குறைந்தது தங்க விலை..!

கடந்த மாதம் தங்க விலை 30 ஆயிரத்தை எட்டியது போல், இந்த மாதமும் உச்சத்தை எட்டி விடுமோ என மக்கள் அச்சத்திலிருந்தனர்.

இந்த மாத துவக்கம் முதல் தங்க விலை பெரும் ஏற்றத்தைச் சந்தித்தது. 28 ஆயிரத்துக்கு விற்கப் பட்டு வந்த தங்க விலை கிடுகிடுவென உயர்ந்து 29 ஆயிரத்துக்கு மேல் விற்கப்பட்டது. கடந்த மாதம் தங்க விலை 30 ஆயிரத்தை எட்டியது போல், இந்த மாதமும் உச்சத்தை எட்டி விடுமோ என மக்கள் அச்சத்திலிருந்தனர். இந்நிலையில், வெகு நாட்கள் தங்க விலையில் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது. 

Gold

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.32 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.3,638க்கு விற்கப்படுகிறது. அதன் படி, ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.256 குறைந்து ரூ.29,104க்கு விற்கப் படுகிறது. 

மேலும், வெள்ளி விலையில் கடந்த இரண்டு நாட்களாக எந்த மாற்றமும் ஏற்படாத நிலையில், இன்றும் அதே நிலை நீடிக்கிறது. அதாவது, ஒரு கிராம் வெள்ளி ரூ.49.90க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.49,900க்கும் விற்கப்பட்டு வருகிறது.