வுகான் நகரில் கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகளுடன் டாக்டர்கள் உற்சாக நடனம்

 

வுகான் நகரில் கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகளுடன் டாக்டர்கள் உற்சாக நடனம்

சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகளுடன் டாக்டர்கள் உற்சாக நடனம் ஆடி அவர்களை உற்சாகப்படுத்தினர்.

பெய்ஜிங்: சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகளுடன் டாக்டர்கள் உற்சாக நடனம் ஆடி அவர்களை உற்சாகப்படுத்தினர்.

சீனாவின் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில், உலகளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 1483 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 116 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ttn

கொரோனா வைரஸ் பரவத் தொடங்க மிக முக்கிய காரணமான வுகான் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் காய்ச்சலால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அந்த நோயாளிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில், அவர்களது அச்சத்தை போக்கி உற்சாகப்படுத்த நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக டாக்டர்கள் அவர்களுடன் இணைந்து நடமாடினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.