வீர் சாவர்க்கர் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் உருவாகி இருக்காது- உத்தவ் தாக்கரே பேச்சு

 

வீர் சாவர்க்கர் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் உருவாகி இருக்காது- உத்தவ் தாக்கரே பேச்சு

சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அரசியல்வாதியுமான வீர் சாவர்க்கர் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் உருவாகி இருக்காது என சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசியுள்ளார்.

மும்பையில் பிரபல வரலாற்று எழுத்தாளர் விக்ரம் சம்பத் எழுதிய வீர் சாவர்க்கரின் சுயசரிதை புத்தகம் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: வீர் சாவர்க்கர் இந்த நாட்டின் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் உருவாகி இருக்காது. சவார்க்கர் இந்துத்வா தத்துவத்தின் தந்தையாகவும் கருதப்படுகிறார். நமது அரசு இந்துத்துவா அரசு மற்றும் வீர் சர்வார்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.

வீர் சாவர்க்கர்

நேரு மற்றும் காந்தி ஆற்றிய பணிகளை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் இந்திய அரசியல் சூழ்நிலையில்  2 குடும்பங்களுக்கு மேல் பிறந்துள்ளதை இந்த நாடு பார்த்துள்ளது. முதல்ல ராகுல் காந்திதான் இந்த புத்தகத்தை படிக்க வேண்டும். 14 ஆண்டுகள் சிறையில் சவார்க்கர் அனுபவித்ததை போல் வெறும் 14 நிமிடங்கள் சிறையில் நேரு அனுபவித்து இருந்தால் அவரை வீர் என்று குறிப்பிடுவேன்.

சாவர்க்கர் புத்தகம்

மகாராஷ்டிராவின் அனைத்து எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களும் இந்த புத்தகத்தை வாங்க வேண்டும். மாநிலத்தின் ஒவ்வொரு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின்  லைப்ரிகளிலும் இந்த புத்தகம் இருப்பதை உறுதி செய்வேன். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா சட்டப்பேரவை துணை தலைவர் நீல் கோர்கே,சிவ சேனா எம்.எல்.ஏ. சடா சர்வாங்கர் உள்பட பலர் கலந்து கொண்டர்.