‘வீரமாதேவி’-க்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு: சன்னி லியோன் உருவ பொம்மை எரிப்பு

 

‘வீரமாதேவி’-க்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு: சன்னி லியோன் உருவ பொம்மை எரிப்பு

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிக்கும் ‘வீரமாதேவி’ படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெங்களூரு: பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிக்கும் ‘வீரமாதேவி’ படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆபாச படங்களில் நடித்து பின் பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம்வரும் சன்னி லியோன், தன் மீதான கவர்ச்சி பிம்பத்தை நீக்க தமிழ்-தெலுங்கில் உருவாகும் ‘வீரமாதேவி’ என்ற சரித்திர கதையில் நடித்து வருகிறார். வி.சி.வடிவுடையான் இயக்கி வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் ரிலீசாகவுள்ள நிலையில், இப்படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

veeramadevi

போர்ன் ஸ்டாரான சன்னி லியோன், பாலிவுட்டில் கலக்கி வருவதை எதிர்த்து பாலிவுட் நடிகைகள் பலர், சன்னி லியோனை நாடு கடத்த வேண்டும் என போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து மும்பையில் இவரது ஆபாச புகைப்படங்கள் கூடிய பதாகைகளை வைக்க எதிர்ப்பு கிளம்பியது. அடுத்து, பெங்களூரில் ஹோட்டல் ஒன்றில் நடைபெறவிருந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்ப அந்த நிகழ்ச்சிக்கே தடை விதிக்கப்பட்டது.

பாலிவுட் தொடங்கி பெங்களூரு வரை சன்னி லியோனுக்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில், சரித்திர நாயகியான ‘வீரமாதேவி’ கதாபாத்திரத்தில் தமிழ் படத்தில் நடிக்கும் சன்னி லியோனுக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் கடந்த சில நாட்களாக போராட்டதில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘வீரமாதேவி’ படத்தின் போஸ்டர்களுக்கு செருப்பு மாலை அணிவித்தும், சன்னி லியோனின் உருவ பொம்மையை எதிர்த்தும் போராட்டம் வெடித்துள்ளது. தனது ஆபாச நடிகை என்ற பிம்பத்தை உடைக்கவே சன்னி லியோன் இத்தகைய பெருமை வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிப்பதாக கன்னட ரக்‌ஷன வேதிக அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.