வீரப்பன் நடமாட்டத்தால் நடந்த நன்மை இதுதான்: வனத்துறை அதிகாரி சொல்லும் உண்மை!

 

வீரப்பன் நடமாட்டத்தால் நடந்த நன்மை இதுதான்: வனத்துறை அதிகாரி சொல்லும் உண்மை!

சத்தியமங்கலம் வனப்பகுதியில் வீரப்பன் நடமாட்டம் இருந்ததால் இதை ஆக்கிரமிப்பு செய்ய யாராலும் முடியவில்லை என்று சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர்  நாகநாதன் தெரிவித்துள்ளார். 

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் வனப்பகுதியில் வீரப்பன் நடமாட்டம் இருந்ததால் இதை ஆக்கிரமிப்பு செய்ய யாராலும் முடியவில்லை என்று சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர்  நாகநாதன் தெரிவித்துள்ளார். 

டிசம்பர் மற்றும் ஜூன் மாதங்களில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு நடைபெறும்.  ஆண்டுக்கு இருமுறை நடக்கும்  இந்த கணக்கெடுப்பானது இன்று  தொடங்கி ஜூலை 4ம் தேதி வரை 6 நாட்கள் நடைபெற உள்ளது.  இதற்கான ஒருநாள் பயிற்சி முகாம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரிஅம்மன் கோயில் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது.

veerappan

இதில் கலந்து கொண்டு பேசிய முதன்மை வனப்பாதுகாவலரும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குநருமான நாகநாதன், சத்தியமங்கலம் வனப்பகுதியில் வீரப்பன் நடமாட்டம் இருந்ததால் இதை ஆக்கிரமிப்பு செய்ய யாராலும் முடியவில்லை.   வீரப்பன் குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது. வீரப்பன் காடுகளைத் தவறாகப் பயன்படுத்தி இருக்கலாம்.அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்  இருக்கலாம். இருப்பினும், இந்த வனப்பகுதியின் பாதுகாப்பிற்கு மறைமுகமாக உதவியவர் அவர்தான்’ என்றார்.

இந்த பயிற்சி முகாமில் மாவட்ட வன அலுவலர்கள், வனச்சரக அலுவலர்கள், வனத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.