வீணானதா திமுகவின் வெற்றி: சொதப்பல் பிளான்; அப்செட்டில் ஸ்டாலின்!?

 

வீணானதா திமுகவின் வெற்றி: சொதப்பல் பிளான்; அப்செட்டில் ஸ்டாலின்!?

தமிழகத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றிருந்தாலும், மத்தியில் பாஜக ஆட்சியைப் பிடிப்பது ஸ்டாலின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றிருந்தாலும், மத்தியில் பாஜக ஆட்சியைப் பிடிப்பது ஸ்டாலின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியானது கடந்த சட்டப்பேரவை தேர்தலிலிருந்தே  உள்ளது. கருணாநிதி காலத்திலிருந்தே திமுக – காங்கிரஸ் உறவு வலுவாக உள்ளது. அதனால் காங்கிரஸ் கூட்டணி என்றால் அது திமுகவுடன் தான் என்று சொல்லும் அளவிற்கு இந்த கட்சிகளுக்கு இடையேயான உறவு உள்ளது. அதனால் தான் உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் திமுக தலைவர் கருணாநிதி சிலையைச் சோனியா காந்தி திறந்து வைத்தார். அதே கூட்டத்தில் அடுத்த பிரதமர் வேட்பாளர்  ராகுல் காந்தி என்று ஸ்டாலின் வெளிப்படையாக அறிவித்தார்.

stalin

அந்த வகையில் இந்த தேர்தலிலும் திமுக – காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது. ஆனால்  காங்கிரஸ் பாஜகவிடம் பின்னடைவைச் சந்தித்த நிலையில், பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது பாஜக. அதனால்  திமுக கூட்டணி இந்த தேர்தலில்  38  இடங்களில் முன்னிலை வகித்தாலும், மத்திய அமைச்சரவையில் இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கனிமொழியை எப்படியாவது அமைச்சர் நாற்காலியில் உட்கார வைத்து விட வேண்டும் என்ற கருணாநிதி குடும்பத்தின் திட்டமும் வீணாய் போனது. 

kani

இருப்பினும் முதல் முறையாக களம்கண்ட கனிமொழி, பாஜக வேட்பாளர் தமிழிசையை மண்ணை கவ்வச் செய்துள்ளார்.  என்ன தான் கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் பங்கேற்கவிட்டாலும் திமுகவுக்கு இம்முறை கிடைத்தது மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. போட்டியிட்ட 39 தொகுதிகளில் 38ல் முன்னணி வகிப்பது என்பது சாதாரணம் அல்ல. அதே சமயம் இந்த தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் அதிமுகவின் நிலை என்ன என்பதைப் பொட்டில் அடித்தாற்போல் காட்டியுள்ளது.

 

stalin

‘என்னதான் இருக்கட்டுமே, ஸ்டாலின் ஒழுங்கா பாஜக கூட கூட்டணி வச்சிருந்தா 38 அமைச்சர்களோட ஜம்முன்னு பார்லிமென்ட் போயிருக்கலாம்ன்னு கட்சிக்குள்ளேயே சிலர் முணுமுணுக்க, இதை  கேள்விப்பட்ட ஸ்டாலினோ,  ஏய்யா நான் நல்லா இருக்குறது பிடிக்கலையா? பாஜக கூட போயிருந்தா இது கூட கிடைக்காம தலையில துண்டு போட்டுட்டு தான் போயிருக்கணும்’  என்று சகட்டு மேனிக்கு வச்சி செஞ்சிட்டாராம்.