வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்த 3 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு!

 

வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்த 3 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு!

ஒரு மாதம் வீட்டு வாடகை வாங்கக் கூடாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது. குறிப்பாக பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்ட சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் ஏழை, எளிய கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அடுத்த 3 மாதங்களுக்கு  இ.எம்.ஐ வசூலிக்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் தெரிவித்தது.  அதே போல ஒரு மாதம் வீட்டு வாடகை வாங்கக் கூடாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

ttn

 
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, தமிழகம் முழுவதிலும் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்த 3 மாதம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜூன் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது என்றும் கேராளாவில் உள்ள தமிழர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம் என்று கூறினார். மேலும், கோவையில் தங்கியிருக்கும் வட மாநில மாணவர்களுக்கும் தேவையானவற்றை கொடுக்கவும், உணவு கிடைக்காதவர்களுக்கு உடனடியாக உணவு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.