வீட்டு பால்கனியில் இருந்து தேசிய கீதம் பாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மக்கள்

 

வீட்டு பால்கனியில் இருந்து தேசிய கீதம் பாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மக்கள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மக்கள் தங்கள் வீட்டு பால்கனியில் இருந்து தேசிய கீதம் பாடிய நிகழ்வு பல நாட்டினர் கவனத்தை ஈர்த்துள்ளது.

அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மக்கள் தங்கள் வீட்டு பால்கனியில் இருந்து தேசிய கீதம் பாடிய நிகழ்வு பல நாட்டினர் கவனத்தை ஈர்த்துள்ளது.

கொரோனா வைரஸை எதிர்ப்பதற்கான மக்களின் மன உறுதியை அதிகரிப்பதற்கும் நேர்மறை சிந்தனையை பரப்புவதற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ஒரு புதிய முயற்சி தொடங்கப்பட்டது. அதன்படி அந்நாட்டு மக்கள் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு தங்கள் வீட்டு பால்கனிகளில் இருந்து தேசிய கீதத்தை பாட ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இந்த முயற்சியானது கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வரும் முன்னணி தொழிலாளர்கள், சுகாதாரத் துறையில் உள்ள அனைவருக்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைமைக்கும் பாராட்டு தெரிவிப்பதாக அமைந்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் பரப்புவதற்காக அவர்கள் தங்கள் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ள அரசால் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

அபுதாபியின் இளவரசரும், ஐக்கிய அரபு எமிரேட் ஆயுதப்படைகளின் துணை உச்ச தளபதியுமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் முன்னதாக கூறுகையில், வெளிநாட்டவர்கள் கூட தங்கள் வீடுகளின் பால்கனிகளிலிருந்தும் ஜன்னல்களிலிருந்தும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய கீதத்தை பாடுவதைக் கேட்டபோது உணர்ச்சிவசப்பட்டதாகக் கூறினார்.

எங்கள் குடிமக்கள் மற்றும் எங்கள் மண்ணில் வசிப்பவர்கள் குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பெருமிதம் கொள்கிறது. அவர்கள் எங்கள் அடையாளத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். எங்கள் மக்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய கீதத்தை சமூக ஊடக தளங்களில் கோஷமிடுவதைக் கேட்டபோது நான் கண்ணீர் விட்டேன். தேசிய தொற்று நோய் நீக்கம் திட்டம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறதுஎன்று ஷேக் முகமது கூறினார்.