வீட்டு காவலில் முன்னாள் முதல்வர்கள்: ஜம்மு-காஷ்மீரில் பதற்றம்!

 

வீட்டு  காவலில் முன்னாள் முதல்வர்கள்: ஜம்மு-காஷ்மீரில் பதற்றம்!

ஜம்மு – காஷ்மீர் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகச்  செய்திகள் வெளியாகியுள்ளன. 

வீட்டு  காவலில் முன்னாள் முதல்வர்கள்: ஜம்மு-காஷ்மீரில் பதற்றம்!

காஷ்மீர் : ஜம்மு – காஷ்மீர் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகச்  செய்திகள் வெளியாகியுள்ளன. 

காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையில் கலவரத்தை ஏற்படுத்த பயங்கர வாதிகள் திட்டமிட்டுருப்பதாகக் உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் கூடுதல் படைகள் காஷ்மீரில் குவிக்கப்பட்டு வருகிறது. இதனால் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுமா? அல்லது மாநிலம் மூன்றாக பிரிக்கப்படுமா?என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்ட தலைவர்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவோடு இரவாக காங்கிரஸ் தலைவர் உஸ்மான் மஜித் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர் தரிகாமி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதற்கு மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய டிவிட்டரில், ‘ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளது, தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அனைத்து ஜனநாயக விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை மத்திய அரசு மீறப்போவதைக் காட்டுகிறது. அரசியல் தலைவர்களின் வீட்டுக் காவலை கண்டிக்கிறேன் என்றும் இந்த  நெருக்கடியான  சூழல் நிலைக்குமா? என்பது இன்று தெரிந்துவிடும். மத்திய அரசு ஏதோ செய்வதில் உறுதியாக இருக்கிறது ‘என்று பதிவிட்டுள்ளார்.