வீட்டு காவலில் ஆந்திர முன்னாள் முதல்வர்… கொந்தளிப்பைத் தடுக்க 144 தடை உத்தரவு…

வீட்டு காவலில்  ஆந்திர முன்னாள் முதல்வர்… கொந்தளிப்பைத் தடுக்க 144 தடை உத்தரவு…

ஆந்திர பிரதேசத்தின்  முன்னாள் முதலமைச்சர் சந்திர பாபு நாயுடும் அவரது மகன் நரலோகேஷும் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டுள்ளனர்.

ஆந்திர பிரதேசத்தின்  முன்னாள் முதலமைச்சர் சந்திர பாபு நாயுடும் அவரது மகன் நரலோகேஷும் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டுள்ளனர்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி வன்முறையில் ஈடுபடுவதாகக் கூறி தெலுங்கு தேச கட்சித் தொண்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தை இன்று நடத்த திட்டமிடப் பட்டிருந்த நிலையில், அதனை தடுப்பதற்காக ஜெகன் மோகன் ரெட்டி அரசு தெலுங்கு தேச கட்சியின் தலைவரும் ஆந்திர முன்னாள் முதலமைச்சரும் ஆன சந்திரபாபு நாயுடுவையும் அவரது மகனையும் வீட்டுக்காவலில் வைத்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து நரசராவ்பேட்டா, சட்டேனாபள்ளி, குரஜாலா உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டுக்காவலில் வைக்கப் பட்ட சந்திர பாபு நாயுடுவின் வீட்டிற்கு செல்ல முயன்ற தெலுங்கு தேச கட்சி  தொண்டர்களையும் கைது செய்தது ஜெகன் மோகன் ரெட்டி அரசு.