வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்த எச்.டி.எப்.சி. நிறுவனம்….

 

வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்த எச்.டி.எப்.சி. நிறுவனம்….

எச்.டி.எப்.சி. நிறுவனம் வீட்டு கடனுக்கான வட்டி விகிதத்தை 0.15 சதவீதம் குறைத்துள்ளது.

நாட்டின் மந்தகதியில் இருக்கும் பொருளாதாரத்தை முன்னேற்ற ரிசர்வ் வங்கியும், மத்தியஅரசும் இணைந்து செயல்படுகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக வங்கி அமைப்பில் வட்டி விகிதம் இறங்குமுகமாகவே உள்ளது. கொரோனா வைரஸ் நெருக்கடி மத்தியில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில் கடந்த மாதம் ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டியை 0.75 சதவீதம் குறைத்தது.

வீட்டுக் கடன்

இதனையடுத்து நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான  ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்பட பல வங்கிகள் வட்டி குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டன. தற்போது தனியார் துறையை சேர்ந்த நாட்டின் முன்னணி அடமான கடன் வழங்கும் நிறுவனமான எச்.டி.எப்.சி. வீட்டு கடனுக்கான வட்டியை 0.15 சதவீதம் குறைத்துள்ளது. வங்கி துறையில் கடனுக்கான செலவினம் படிப்படியாக குறைந்து வருவதால் எச்.டி.எப்.சி. நிறுவனம் வட்டி குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

வட்டி விகிதம் குறைப்பு

இந்த வட்டி குறைப்பு ஏப்ரல் 22ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த வட்டி குறைப்பு நடவடிக்கையால் தற்போதுள்ள அனைத்து ரீடெயில் வீட்டு கடன் வாடிக்கையாளர்கள் பலன் பெறுவார்கள் என எச்.டி.எப்.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.