வீட்டில் லட்சுமியை வரவேற்கிறது இருக்கட்டும்… முதலில் மூதேவியை விரட்டியடிங்க! என்னவெல்லாம்  செய்யக் கூடாது?

 

வீட்டில் லட்சுமியை வரவேற்கிறது இருக்கட்டும்… முதலில் மூதேவியை விரட்டியடிங்க! என்னவெல்லாம்  செய்யக் கூடாது?

எப்போ பார்த்தாலும், நான் சரியா தான் வேலை செய்யறேன்… நிறைய சம்பாதிக்கிறேன்… ஆனாலும் வீட்டில் லட்சுமி கடாட்சமே இல்லைன்னு புலம்பிக்கிட்டு இருக்கீங்களா…? அப்போ இதை முழுசா படிச்சு பாருங்க… மூதேவி வாசம் செய்யும் வீட்டில் லட்சுமி நுழையவே மாட்டாள். அந்தக் காலத்தில் இருந்தே அக்கா, தங்கை உறவு அப்படி தான் இருந்திருக்கு… சரி நமக்கேன் வம்பு… நாம வந்த வேலையைப் பார்ப்போம்… இப்போ உங்க வீட்டில் இதையெல்லாம் செய்றீங்களான்னு யோசிச்சு பாருங்க..

எப்போ பார்த்தாலும், நான் சரியா தான் வேலை செய்யறேன்… நிறைய சம்பாதிக்கிறேன்… ஆனாலும் வீட்டில் லட்சுமி கடாட்சமே இல்லைன்னு புலம்பிக்கிட்டு இருக்கீங்களா…? அப்போ இதை முழுசா படிச்சு பாருங்க… மூதேவி வாசம் செய்யும் வீட்டில் லட்சுமி நுழையவே மாட்டாள். அந்தக் காலத்தில் இருந்தே அக்கா, தங்கை உறவு அப்படி தான் இருந்திருக்கு… சரி நமக்கேன் வம்பு… நாம வந்த வேலையைப் பார்ப்போம்… இப்போ உங்க வீட்டில் இதையெல்லாம் செய்றீங்களான்னு யோசிச்சு பாருங்க.. இதையெல்லாம் செய்துக்கிட்டு இருந்தா நிச்சயமா உங்க வீட்டில் மூதேவி நிரந்தரமா தங்க ஆரம்பித்து விடுவாள். முதலில் மூதேவியை வீட்டை விட்டு விரட்டியடித்தால் தான் ஸ்ரீதேவி வருவதைப் பற்றி யோசிக்கவே துவங்குவாள். 

modevi

நம் வீட்டில் என்ன தான் பணம் சம்பாதித்தாலும் சேமிப்பு என்பது இருக்காது. சம்பாதித்த பணத்தில் கடன்கள் கொடுத்து வருவதுமாக இருக்கும். கடவுளே நல்ல வேளை இந்த மாசம் அதிகமான செலவு எதுவும் இல்லைன்னு யோசிச்சாலே ஏதாவது வீண் செலவுகள் வரும். அப்படி பணப்பிரச்சனைகள் இல்லாத நாட்களில் கணவன் மனைவியிடையே சச்சரவுகள் அதிகரிக்கும்.
காலையில் வீட்டினை சுத்தம் செய்யாமல் இருப்பது மூதேவி வசிப்பதற்கு காரணமாக இருக்கும். காலையில் சீக்கிரமாகவே வீட்டை கூட்டிப் பெருக்கி விட வேண்டும். அதே மாதிரி மாலையில் சூரியன் மறைந்த பிறகு வீடு மற்றும் வாசலை கூட்டிப் பெருக்கக் கூடாது.  சூரியன் மறைந்த பிறகு வீட்டைப் பெருக்கினால், வீட்டுக்கு வரும் ஸ்ரீதேவி மீது கூட்டி தள்ளுவது போல் ஆகும். 
சமையலறையில் அடுப்பினை துடைக்காமல் தொடர்ந்து பயன்படுத்தி வருவது. எப்பொழுதும் காலையில் எழுந்த உடனே அடுப்பை சமைப்பதற்கு முன் கண்டிப்பாக துடைத்து விட்டு தான் சமையலை துவங்க வேண்டும்.
வீட்டில் உப்பு, சர்க்கரை, அரிசி, பால் போன்ற வெண்மை நிறப் பொருட்கள் முழுமையாகத் தீர்ந்த பிறகு தான் மீண்டும் வாங்குவது. நான் மேலே சொன்ன பொருட்கள் தீர்வதற்கு முன்பே வீட்டில் வாங்கி வையுங்கள். அது செல்வத்தின் பொருட்கள். வீட்டில் பணம் இருக்கோ இல்லையோ, ஆனால் இந்த பொருட்களை குறையாமல் இருந்தாலே பணம் வர ஆரம்பிச்சுடும்.
வீட்டில் எச்சில் பாத்திரங்களை கழுவாமல் அதிக நேரம் அப்படியே ஊற வைத்திருப்பது. எச்சில் பாத்திரங்கள் அனைத்துமே வீடு சுத்தமில்லாததை சொல்பவைத் தான்.  வீட்டிற்குள் லட்சுமி கடாட்சம் இருக்க வேண்டும் என்றால் நாம் தானே சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
சில பெண்கள் வாரத்தின் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தலைக்கு குளிக்காமல் இருப்பது. மீதி நாட்களில் தலை குளிப்பது. சில பெண்கள் வாரத்தில் ஏழு நாளும் தலைக்கு குளிப்பார்கள் அவர்களை பற்றி கவலை இல்லை. ஆனால் வாரத்தில் ஒருநாள் விட்டு ஒருநாள் குளிக்கிறேன் என்ற பெயரில் செவ்வாய் வெள்ளியில் குளிக்க மறந்துவிடுவார்கள்.
நேற்று தானே தலை குளித்தோம் இன்று ஏன் மீண்டும் குளிக்கவேண்டும் என்ற எண்ணதால் குளிக்க மாட்டார்கள். கண்டிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளியில் தலை குளிக்க வேண்டும். தெய்வத்தையும் வழிபட வேண்டும்.

bath

வீட்டில் இருக்கும் ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் தலைக்கு குளிக்காமல் இருப்பது. ஆண்கள் வாரத்தில் ஏழு நாளும் தலை குளித்தாலும் சரி தான். ஆனால் குளிக்க முடியாதவர்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் கண்டிப்பாக தலை குளிக்க வேண்டும்.
வீட்டில் ஆண்கள் விளக்கு ஏற்றுவது. வீட்டில் எப்பொழுதும் பெண்கள் தான் விளக்கேற்ற வேண்டும். ஆண்கள் விளக்கேற்றக் கூடாது.
வீட்டில் எப்போதும் நல்ல, சந்தோஷமான, மங்களமான வார்த்தைகளைத் தான் உச்சரிக்க வேண்டும். சில வார்த்தைகளைப் பேசக்கூடாது. அதாவது கிடைக்காது, வராது, இல்லை என்பன போன்ற வார்த்தைகளை அதிகம் உபயோகப்படுத்தக் கூடாது. வீட்டில் பேச்சு வார்த்தைகளில் மேலே குறிப்பிட்ட வார்த்தைகள் அதிகம் உபயோகப்படுத்தாதீர்கள். வீட்டில் எப்போதும் இல்லை என்று சொன்னால் இல்லாமலே போய் விடும். கிடைக்கவே கிடைக்காது என்றாலும் கிடைக்காது. எல்லாம் இருக்கு, கிடைக்கும் என்று பேசி பழகி கொள்ளுங்கள். இவைகளைத் தொடர்ந்து வீட்டினுள் செய்து பாருங்கள் கண்டிப்பாக லட்சுமி கடாட்சம் உங்கள் வீட்டிற்குள் இருக்கும்.